மனம் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. நம் மனம் வலிமையாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். பலவீனமான மனம் எல்லாத் துறைகளிலும் தோல்வியையே கொடுக்கும். மனம் பதட்டப் படாமல் இருக்கும் பொழுது முழுமையான செயல் திறனுடன் செயல் பட முடியும். நம் எண்ணங்கள் தெளிவாக இருக்கும். பதட்டமில்லாத மனம் தான் வெற்றியின் இரகசியம். மேலே படியுங்கள்....
பொதுவாக பலர் சிறிய பிரச்சினைகளுக்கே துவண்டு போய் விடுகின்றனர். பலவீனமான மனம் தான் அதற்கு முக்கியமான காரணமாகும். மனம் வலிமையாக இருக்கும் போது பெரிய வெற்றிகளும் பெரிய தோல்விகளும் நம்மை பெரிதாய் பாதிக்காது. பெரிய வெற்றிகள் வரும் போது நாம் எகிறி குதிக்க மாட்டோம். நம் மனதில் கர்வம் வராது. அதே போல் பெரிய இழப்புகளும் தோல்விகளும் வரும் போது நம் மனம் தளராது. நாம் நம் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி எடுத்து வெற்றிக் கனியை கண்டிப்பாக பறிப்போம்.
ஆக, வலிமையான மனம் தான் நம் தொழில் வெற்றிக்கும் சொந்த தனிப்பட்ட வாழ்வின் வெற்றிக்கும் உறுதுணையாகிறது. வலிமையான மனம் எளிதில் பதட்டமடையாது என்பது நிஜம்.
வலிமையான மனத்தைப் பெறுவது எப்படி? ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையும், முறைப் பட்ட தியானமும் உங்கள் மனதை நிச்சயம் வலிமையாக்கும். யோகா உடற்பயிற்சியும் தியானமும் முடிந்தமட்டிலும் தினசரி செய்யுங்கள். பாஸிடிவ் மனிதர்களுடன் பழகுங்கள். எதிர்மறை மனிதர்களுடன் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து விடுங்கள்.
வாழ்க வளமுடன்!
உங்கள் விதியின் 5 விதிகள்
செய்வினை என்பது உண்மையா?

Post a Comment