இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். இசை என்றாலே ஒத்துப் போவது என்று அர்த்தமாகும். அதனால் தான் நாம் இசையைக் கேட்கும் போது தலையை பலமாக ஆட்டுகிறோமோ? எத்தனையோ விதமான இசைகள் உள்ளன. எல்லா இசைகளும் மக்களை மகிழ்விக்கின்றன என்றே சொல்ல வேண்டும். இசையினால் பல நன்மைகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. இசையின் மகிமைகள் தான் என்ன? மேலே படியுங்கள்.....


 சந்தோஷமான மனநிலையில் இருக்கும் போது நாம் நமக்குப் பிடித்த பாடலை முணுமுணுப்பது  இயற்கையே. சோகமான மன நிலையில் இருக்கும் போது சோகப் பாடல்களை கேட்கப் பிடிக்கும். காதலிக்கும் போது காதல் பாட்டுக்கள் மனதை மயக்கும். பொதுவாக எல்லா இசைகளும் எல்லாவிதமான  மக்களுக்குப் பிடிக்கும்.  ஒரு சிலர் மெல்லிசையை அதிகம் விரும்புவார்கள். ஒரு சிலர் ரிதம் இசைக்கு மயங்குவார்கள். பொதுவாக இளைஞர்கள் பாப் இசையை விரும்பிக் கேட்பார்கள்.

இசை தாவரங்களைக் கூட மயக்குகிறது என்பது நிஜம். இசை எல்லா உயிரினங்களையும் மகிழ்விக்கிறது என்றே சொல்ல வேண்டும். சில குறிப்பிட்ட வகையான இசை சில நோய்களைக் கூட குணப் படுத்துவதாக நிருபிக்கப்பட்டிருக்கிறது. இசை மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மனதை அமைதிப் படுத்துகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நல்ல இசையைக் கேட்டால் அது பிறக்கப் போகும் குழந்தைக்கு நல்லது செய்யும் என்கிறார்கள்.

இசையினால் மழையை வரவழைக்க முடியும் என்கிறார்கள். தூக்கம் வராதவர்களை நல்ல இசையினால் தூங்க வைத்திருக்கிறார்கள். இசைக்கு பாலினம், ஜாதி, மதம், வயது, தேசியம் என்ற எந்த பேதமும் கிடையாது. இசைக்கு மயங்காதவர்கள் யார் உளர்?

இசை ஞானி இளைய ராஜாவின் இசை என்னை எத்தனையோ நாட்களில் பரவரசப் படுத்தியிருக்கிறது. இசை தெய்வீகமானது. இசை புனிதமானது. இசை அற்புதமானது. இசை   வாய்ந்தது.

 இசை தமிழன் வாழ்வில் கருவறை முதல் கல்லறை வரை தொடர்கிறது. தாயின்  இதயத்தின்  'டப் டப்' ஓலி  நாம் கேட்கும் முதல் இசை. பின் தாயின் தாலாட்டு. இறுதியில், இறுதி ஊர்வலத்தில் சாவு மேளத்துடன் நம் இசை வாழ்வு முடிகிறது. 

வாழ்க இசை!

வாழ்க வளமுடன்!

யோகாவின் பயன்கள் 

உங்கள் மனதின் அற்புத சக்திகள் 



                                             
                                              
                                           
                                             


Post a Comment

 
Top