தூக்கம்  நமக்கு எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரிந்ததே. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்?  இது எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று என்றே நினைக்கின்றேன். எவ்வளவு மணி நேர தூக்கம் நமக்குத் தேவை? மேலே படியுங்கள்....


தூக்கம் தான் நமக்கு சக்தியைக் கொடுக்கிறது. நம் உடல் தூங்கி எழுந்த பின் புத்துணர்ச்சி பெறுகிறது. போதிய தூக்கம் இல்லா விட்டால் நம் உடலும் உள்ளமும் பாதிக்கப் படுகிறது. பிறந்த குழந்தை சுமார் 15-20 மணி நேரம் தூங்குகிறது. சிறு குழந்தைகள் 10-12 மணி நேரம் வரை தூங்க வேண்டும். பெரியவர்கள் சுமார் 8 மணி நேரம் தூங்கினால் நலம். ஆனால் நாம் வயது ஆக ஆக நாம் தூங்கும் நேரம் குறைகிறது என்றே சொல்ல வேண்டும்.

வயதானவர்கள் 5 மணி நேரம் தான் தூங்குவார்கள். நோயுள்ளவர்கள் தூங்க முடியாமல் அவதிப் படுவார்கள். உடலில் உபாதை உள்ளவர்களும் தூங்க முடியாமல் அவஸ்தைப் படுவார்கள். தூக்கமின்மையால் அவதிப் படுபவர்கள்
சரியான உணவை இரவில் உட்கொள்ள வேண்டும். கூடிய மட்டில் குறைவாக இரவில் உண்ண  வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவை இரவில் உட்க்  கொள்ளுங்கள். மென்மையான இசையைக்  கேளுங்கள். எந்த பிரச்சினையையும் இரவில் படுக்கைக்கு எடுத்து செல்லாதீர்கள்.

தினசரி தியானம் செய்யுங்கள். வாழ்க்கையை எளிதாக எடுத்துப் பழகுங்கள். பிரச்சினைகள் வாழ்க்கையில் சகஜம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடலையும் மனதையும் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

சரி, ஒரு மனிதனுக்கு எவ்வளவு மணி நேர தூக்கம் தேவை? அது ஒருவருக்கொருவர் மாறும். ஒரு சிலர் வெறும் 5 மணி நேரம் தூங்கி அற்புதமான ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அதே சமயம் வேறு சிலரோ குறைந்தது 9 மணி நேரம் தூங்கினால் தான் ஆரோக்கியமாக இருப்பார்கள். உங்கள் உடலை கூர்ந்து கவனியுங்கள். அதற்கேற்றார் போல் உங்கள் தூங்கும் நேரத்தை முடிவு செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்!

வயது என்பது வெறும் எண் தானா?

யோகாவின் பயன்கள் 

Post a Comment

 
Top