நாம் எல்லோரும் இந்த உலகமே நம்மை சுற்றித் தான் சுழன்றுக் கொண்டு இருப்பதாக நினைக்கின்றோம். அதாவது உலகமே நம்மைக் கவனித்துக் கொண்டு இருப்பதாக நினைக்கின்றோம். அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ, இவர்கள் நம்மை தப்பாக எடுத்துக் கொள்வார்களோ  என்று பெரும்பாலும் நாம் பிறருக்காகவே வாழ்வதாகவேத் தோன்றுகிறது. உண்மையில் உலகம் ஒன்றும் உங்களை சுற்றி சுழலவில்லை. மேலே படியுங்கள்.....



நாம் பொதுவாக நம்மைப் பற்றியே அதிகமாக சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம். உலகம் நம்மை பற்றி ஏதாவது தவறாக பேசி விடுமோ, நம்மை யாராவது கேவலமாக பேசி விடுவார்களோ என்ற அச்சம் இருந்துக் கொண்டே இருக்கிறது என்பது நிஜம். நம்முடைய தோற்றம் எடுப்பாக இல்லையோ, நாம் மற்றவர்கள் போல் பணக்காரராக இல்லையோ என்றெல்லாம் நம் மனது நம்மைப் பற்றி ஒரு சுய விமர்சனம் பண்ணிக் கொண்டே இருக்கிறது. உண்மையில் இவ்வுலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன.  நாம் கற்பனை பண்ணுவது போல் நம்மைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை என்பது தான் உண்மை.

நாம் பிறருக்காக வாழ்வதை தவிர்ப்போம். உலகம் ஒன்றும் நம்மை சுற்றி சுழல வில்லை என்கின்ற யதார்த்தத்தை அறிவோம்.

வாழ்க வளமுடன்!

உங்கள் வருங்காலத்தை சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்களா?

நீங்கள் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

Post a Comment

 
Top