நாம் இன்று இணைய தளங்கள் கோலோச்சி வரும் நவீன  உலகில்  வாழ்ந்து கொண்டிருகிறோம். இன்று நமக்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. 
நமது வாழ்க்கைத் தரம் வெகுவாக உயர்ந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.  ஆனால் உண்மையில் நாம் நாகரீக சமுதாயத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? மேலே படியுங்கள்....



ஒரு சமுதாயம் நாகரீக சமுதாயமா என்று எப்படி சொல்லுவது? நாகரீக சமுதாயத்தில் மக்கள் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்கள். அங்கு அன்பு இருக்கும். வெறுப்பு இருக்காது. அந்த சமுதாயத்தில் வாழும் மக்களிடம் இரக்கம் இருக்கும். விரோதங்களும் குரோதங்களும் இருக்காது. பண்பு இருக்கும். மக்கள் நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பார்கள். மக்களிடையே நல்ல எண்ணங்களும் நேர் மறை எண்ணங்களும் மிகுந்திருக்கும். வன்முறைக்கு அங்கு இடமிருக்காது. திருட்டு பயமும் இருக்காது.

முக்கியமாக மக்கள் மன அழுத்தம் இல்லாமல் வாழ்வார்கள். ஆனால் இன்று உலகின் வலுவான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் தான் மன அழுத்தத்தை குணமாக்கும் மாத்திரைகள் அதிகமாக விற்கின்றன. ஆக ஒரு சமுதாயம் நாகரீகமாக இருப்பதற்கு பணம் மட்டும் போதாது என்பது தெளிவாகிறது. 

அன்பு தான் நாகரீக சமுதாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் என்று தோன்றுகிறது. அன்பும் உழைப்பும் தான் ஒரு சமுதாயத்தை நாகரீகமாக்கும் என்று நினைக்கின்றேன். நாமும் நன்றாக வாழவேண்டும். மற்றவர்களும் நன்றாக வாழ வழி விட வேண்டும். அது தான் நாகரீகம்.

வாழ்க வளமுடன்!

ஒரு குழந்தையைப் போல் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

நேர்மையாய் இன்று வாழவே முடியாதா?

Post a Comment

 
Top