வாழ்க்கையில் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. ஒரு சிலரே நினைத்ததை சாதிக்கின்றனர். மற்ற எல்லோரின் கனவுகளும் இறுதி வரை கனவுகளாகவே நிலைத்து விடுகின்றன. ஏன் ஒரு சிலர் மட்டும் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்? அநேகர் ஏன் வாழ்க்கையில் தோற்கிறார்கள்? வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வியுற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? மேலே படியுங்கள்....
வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் கனவு கண்டவர்களே. வாழ்க்கையில் கனவுகளும் இலட்சியங்களும் இல்லாதவர்கள் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் கனவு காண்பவர்கள் எல்லோரும் ஜெயிப்பதுமில்லை என்பது தான் நிஜம். வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் தங்கள் கனவு நனவாகும் என்று முழுமையாக நம்பினார்கள்.
அவர்கள் கனவுகள் நனவாக பல வருடங்கள் பிடித்திருக்கலாம். அவர்கள் தங்கள் இலட்சியத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்த போது அதற்கான திறமைகளும் தகுதிகளும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று நிச்சயமாக நம்பினார்கள். அதற்காக உழைத்தார்கள். கடுமையாக உழைத்தார்கள். அவர்களது முழு சிந்தனையும் அவர்களின் இலட்சியத்தின் மேல் மட்டுமே இருந்தது.
'அதெல்லாம் கஷ்டம், நம்மால் முடியாது, அதில் ரொம்ப ரிஸ்க் இருக்கிறது, அதெல்லாம் நடக்காது' என்று சொன்னவர்கள் எல்லோரும் தோல்வியுற்றார்கள்.
முதலில் கனவு காணுங்கள். அவை நனவாகும் என்று முழுமையாக நம்புங்கள். அதற்கான தகுதிகளையும், திறமைகளையும் அயராமல் வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை உங்களுக்குக் கட்டாயம் வசப் படும்.
வாழ்க வளமுடன்!
உங்கள் வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிப்பது எது?
ஒப்பிடுதல் முன்னேற்றத்திற்குத் தேவையா?

Post a Comment