இவ்வுலகில் எல்லோரும் ஏதோ ஒரு கவலை அல்லது பயத்தோடு தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வை முழுமையான  சந்தோஷத்துடன் ஏன் வாழமுடிவதில்லை? கவலையும் பயமும் வருவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ஏதோ ஒன்றை இழுந்து விடுவோமோ என்ற பயம் தான். ஆரோக்கியம், பணம், சொத்து, சொந்த பந்தங்கள், தொழில், புகழ்  இவற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களை இழந்து விடுவோமோ என்ற பயம் தான் உங்கள் துன்பத்திற்கெல்லாம் காரணமாக இருக்கிறது. அப்படி  நீங்கள் இழப்பதற்கு என்ன தான் இருக்கிறது இவ்வுலகில்? மேலே படியுங்கள்...


ஒரு உண்மையை உணர்ந்து விட்டால் இந்த துன்பங்களும் பயங்களும் நம்மை விட்டு அகன்று விடும். அந்த உண்மை என்ன? ஒன்று நமக்கு உரியதாக இருந்தால் தான் நாம் அதை இழக்க முடியும்? இவ்வுலகிற்கு  நாம் வந்த போது வெறும் கையுடன் தானே வந்தோம்? நாம் பிறகு இவ்வுலகில் அடைந்தது எல்லாமே இங்கிருந்து பெற்றது தானே?  பின் எப்படி நாம் அதை இழக்க முடியும். 

நாம் இப்பொழுது எவற்றிற்கெல்லாம் உரிமையாளராக இருக்கிறோமோ அவற்றை எல்லாம் நாம் இங்கிருந்து தானே பெற்றோம்? இவ்வுலகம் தான் எல்லாவற்றையும் நமக்கு அளித்தது. அந்த உலகம் அவற்றை நம்மிடமிருந்து திருப்பி எடுத்துக் கொள்ளும் போது நாம் ஏன் வருத்தப் பட வேண்டும்?வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கும் போது கவலைக் கொள்ளலாமா?

"உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்தாய் அது வீணாவதற்கு?

எதை எல்லாம் நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்து தான் எடுக்கப் பட்டது".

-பகவத் கீதா 

நாம் இழப்பதற்கு இவ்வுலகில் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து கொண்டால் பின் நமக்கு பயமும் துன்பமும் இருக்கவே இருக்காது.

எந்த சூழ்நிலையிலும் வாழ்வோம். எந்த துன்பத்தையும் தாங்குவோம். அச்சமும் அதிக எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வோம்.

வாழ்க வளமுடன்!

மரணத்திற்கு பின் வாழ்வு இருக்கிறதா?

நல்லவர்கள் துன்பப் படுவதேன்?





Post a Comment

 
Top