தெரிந்தொ தெரியாமலோ நாம் இவ்வுலகில் பிறந்து விட்டோம். நாம் அர்த்தமுள்ள வாழ்க்கையை தான் வாழ்கிறோமோ? பணம் சம்பாதிப்பது மட்டும் தான் வாழ்க்கையா? இனப்பெருக்கம் செய்யத் தான் நாம் இவ்வுலகில் பிறந்தோமா? எது அர்த்தமுள்ள வாழ்க்கை? மேலே படியுங்கள்....


நம்மில் பலர் எந்த குறிக்கோளும் இல்லாமல் ஏதோ ஒரு வாழ்க்கையை  வாழ்ந்து முடித்து விடுகிறார்கள். பெரும்பாலான மக்கள் பணம் சம்பாதிப்பதையே பெரிய குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் பதவி, புகழுக்காக வாழ்கின்றனர். அவர்களைப் பொருத்தமட்டில் பணம், பதவி, புகழ் போன்றவை தான் அவர்களின் வாழ்க்கையின் பிரதான  அர்த்தமாக விளங்குகிறது.

உண்மையான அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது பணம், பதவி, புகழில் இல்லை. நாம் மற்றவரிடம் அன்பாக இருக்கிறோமா? கர்வம் இல்லாமல் இருக்கிறோமோ? மற்றவரைக் கஷ்டப்படுத்தாமல் இருக்கிறோமோ? மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா? தலைக்கனம் இல்லாமல் பணிவுடன் இருக்கிறோமா? ஆன்மிக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோமா? தன்னலமற்ற வாழ்க்கை வாழ்கிறோமா?

அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது அன்புடன் வாழ்வது. பணிவுடன் இருப்பது. தன்னலமற்ற வாழ்க்கை வாழ்வது. ஆன்மிக வளர்ச்சி பெறுவது. 

வாழ்க வளமுடன்!

நாம் யாருக்காக வாழவேண்டும்?

நாம் ஏன் மரணத்திற்கு அஞ்சுகிறோம்?

Post a Comment

 
Top