சுய முன்னேற்றம் புத்தகங்கள் உலமெங்கும் கோடிக் கணக்கான மக்களால் விரும்பி படிக்கப் படுகின்றன என்பது நிஜம். அந்த புத்தகங்கள் உண்மையில் அவர்கள் முன்னேற்றத்திற்கு உதவுகின்றனவா என்பது நிச்சயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தானே? சுய முன்னேற்றம் புத்தகங்கள் உண்மையில் உங்களை முன்னேற்றுமா? மேலே படியுங்கள்......
எத்தனையோ சுய உதவி (Self help) புத்தகங்கள் வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. மக்கள் ஏன் அப்புத்தகங்களை வாங்கி படிக்கிறார்கள்? அந்த புத்தகங்களில் சொல்லப் பட்ட விஷயங்களைக் கடைப் பிடித்தால் தாங்களும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற ஆசையினால் தான் அவர்கள் அத்தகைய சுய முன்னேற்றம் (self development) புத்தகங்களை படிக்கிறார்கள்.
சில மிகவும் பிரபலமான சுய உதவி புத்தகங்கள் உங்களின் பார்வைக்கு இங்கே கொடுக்கிறேன்.
1. How to Win Friends and Influence Them?
2. Think and Grow Rich
3. The Power of Positive Thinking
4. Feel the Fear and Do it Anyway
5. Men are From Mars, women are From Venus
6. The Seven Habits of Highly Effective People
7. How to stop Worrying and Start Living?
8. Awaken the Giant Within
9. The Secret
10. The Bhagavad Gita
இந்த புத்தகங்களிலிருந்து நிச்சயம் நீங்கள் பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம் என்பது உண்மையே. ஆனால் அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துமா என்றால் அதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்பது தான் நிஜம்.
படித்தால் மட்டும் போதாது. அவற்றை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவற்றை நாம் வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டும். இதில் தான் பெரும்பாலும் நாம் எல்லோரும் கோட்டை விட்டு விடுகிறோம். படிப்பது சுலபம். ஆனால் கடை பிடிப்பது நிச்சயம் சுலபம் அல்ல.
நமக்கு எந்த குறிப்புகள் (Tips) பயன் தருமோ அவற்றை நாம் கடைப் பிடித்தால் இந்த புத்தகங்கள் நம் முன்னேற்றத்திற்கு நிச்சயம் வழி வகுக்கும் என்றே நான் நம்புகிறேன்.
உலகின் முதல் சுய உதவி புத்தகம் 'பகவத் கீதை' என்று சொல்லலாம். இன்று நீங்கள் படிக்கும் மிகவும் பிரபலமான புத்தகங்கள் எல்லாம் கீதை என்னும் மாபெரும் கடலிலிருந்து எடுக்கப் பட்ட சிறு துளிகளே.
வாழ்க வளமுடன்!
உங்களின் உள் எதிரிகள்
பக்தியும், பகவத் கீதையும் வயதானவர்களுக்கு மட்டும் தானா?

Post a Comment