எத்தனையோ கோடி மக்களில் ஒரு சிலரே கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள்.  அப்படி என்ன அவர்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுகிறார்கள்?கோடீஸ்வரர்கள் எல்லோரும் அதிபுத்திசாலிகளா? அதனால் தான் அவர்களால் அதீத செல்வம் சேர்க்க முடிந்ததா? மேலே படியுங்கள்.....


ஒரு சிலர் மட்டும் எப்படி கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தானே? கோடீஸ்வரர்கள் அதி புத்திசாலிகள் என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் அவர்களை விட மிகவும் புத்திசாலியாக எத்தனையோ பேர் இந்த உலகில் உள்ளார்கள். அவர்களால் ஏன் பணம் சம்பாதிக்க முடியவில்லை? 

கோடீஸ்வரர்கள் எல்லோரும் அதிபுத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் சுமாரான அறிவு உடையவர்களாக இருந்தாலே போதும். கடினமாக உழைப்பவர்கள் கோடீஸ்வரர்கள் என்று நீங்கள் சொல்லலாம். அவர்களை விட கடினமாக உழைப்பவர்கள் எத்தனையோ பேர் வறுமையில் உழன்றுக் கொண்டு தானே இருக்கிறார்கள்?  

கோடீஸ்வரர்கள் எல்லோரும் பெரும்பாலும் சுய தொழில் செய்பவர்கள் தான்.  கோடீஸ்வரர்கள் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க தயங்காதவர்கள். அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். அதனால் தான் அவர்கள் சுய தொழில் செய்கின்றார்கள். அவர்கள் தீர்க்க தரிசனம் உள்ளவர்கள். எந்த தொழில் பிற்காலத்தில் நன்றாக இருக்கும் என்பதைக் கணிக்கத் தெரிந்தவர்கள். சரியான தொழிலை தேர்ந்தெடுக்கும் திறமை படைத்தவர்கள். 

கோடீஸ்வரர்கள் பணத்தை சரியாக கையாளத் தெரிந்தவர்கள். வரவுக்கு மீறி செலவு செய்யாதவர்கள். தோல்வியைக் கண்டு துவளாதவர்கள். கொஞ்சம் அதிர்ஷ்டமும் உடையவர்கள் என்றே சொல்ல வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தான் கோடீஸ்வரனாக வேண்டும் என்கின்ற தீவிரமான கொள்கை பிடிப்பு மற்றும் வெறி உள்ளவர்கள்.

ஏதோ ஒரு சில அதிபுத்திசாலிகள் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கலாம். ஆனால் நிறைய கோடீஸ்வரர்கள் அதிபுத்திசாலிகள்  அல்லர் என்பது தான் நிஜம்.

வாழ்க வளமுடன்! 


Post a Comment

 
Top