பற்கள் வெண்மையாக இருந்தால் அது நிச்சயம் தனி அழகு தான். வெண்மையான பற்களுடன் ஒருவர் சிரிக்கும் போது அவரது தோற்றம் தனி கவர்ச்சி பெறுகிறது என்பது நிஜம். வெண்மையான பற்களை விரும்பாதவர் யார்? இப்பொழுது வெண்மையான பற்களைப் பெற பலவிதமான சிகிச்சைகள் உள்ளன. ஆனால் அவை எல்லாம் பக்க விளைவுகளை கொடுக்கக் கூடியவை. வெண்மையான பற்களை இயற்கையாக பெறுவது எப்படி? மேலே படியுங்கள்....
சில உணவுகள் இயற்கையாக உங்கள் பற்களை வெண்மையாக வைத்திருக்க உதவுகின்றன என்றால் அது மிகையாகாது. காரட் தினசரி சாப்பிட்டால் அது உங்கள் பற்களிலுள்ள கரைகளை நீக்க உதவும். அதை விட ஆப்பிள் அதிகமாக பற்கலிலுள்ள கரைகளை நீக்க பெரிதும் உதவுகிறது. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். பொதுவாக பச்சைக் காய்கறிகளை சாப்பிட்டால் உங்கள் பற்கள் சுத்தமாகவும் வெண்மையாகவும் இருக்கும். வெள்ளரிக்காயும் தினமும் சாப்பிடலாம்.
வாழைப் பழத்தின் தோலை வைத்து பல் துலக்குங்கள். எலுமிச்சம்பழத்தின் சாரை தினமும் பருகினால் பற்கள் பளிச்சிடும். இவை எல்லாம் பயன் தர முடியாத அளவுக்கு பற்களில் அதிக கரை படிந்திருந்தால் சமையல் சோடா (Baking soda) வுடன் எலுமிச்சம்பழம் சாரை கலந்து ஒரு பற்பசை (பேஸ்ட்) தயார் செய்யுங்கள். அதை வைத்து பல் துலக்குங்கள். ஆனால், அந்த பற்பசை அதிக நேரம் உங்கள் பற்களில் தங்கக் கூடாது. அது உங்கள் பற்களின் எனாமல்லை பாதிக்கும்.
வெண்மையான பற்களை இயற்கையாக பெறுவது தான் சாலச் சிறந்தது.
வாழ்க வளமுடன்!
பால் குடிப்பது நல்லதா? கெட்டதா?
காலையில் ஏன் எலுமிச்சம்பழம் சாரைக் குடிக்க வேண்டும்?

Post a Comment