நகைச்சுவை நம் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நகைச்சுவை ஒரு நல்ல மருந்து என்பார்கள். எவ்வளவு உண்மை? வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது நிஜம். சிலர் இயற்கையாகவே நல்ல நகைச்சுவையுடன் பேசும் திறமைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்றே நான் சொல்லுவேன். அவர்கள் எல்லோரையும் தங்கள் நகைச்சுவையினால் சந்தோஷப் படுத்துகிறார்கள். நகைச்சுவை உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்றால் அது மிகையாகாது. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் எல்லோரும் நல்லவர்களா? அவர்கள் மென்மையானவர்களா? மேலே படியுங்கள்.....
எனக்குத் தெரிந்த வரை எல்லோரும் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களே. ஆனால் ஒரு சிலரால் மட்டுமே மற்றவரை சிரிக்க வைக்க முடியும். மற்றவர்கள் நல்ல நகைச்சுவையை நன்றாக இரசிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு நகைச்சுவையாக பேச வராது. மற்றவரை சிரிக்க வைத்து அதனால் இன்பம் பெரும் நகைச்சுவையாளர்கள் மென்மையானவர்களா? இது உண்மை என்றே தோன்றுகிறது. ஒருவர் மற்றவரை மகிழ்விக்க ஆசைப் படுகிறார் என்றால் நிச்சயம் அவர் நல்ல மனிதராகத் தானே இருப்பார்? அவர் மேலும் மென்மையான மனம் படைத்தவராக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவே எனக்குப் படுகிறது.
ஏதோ அரிதாக ஒரு சிலர் நகைச்சுவையுடன் பேசும் திறமையுடன் கடினமான இதயத்தையும் பெற்றிருப்பார்கள். ஆனால் பெரும்பாலும் நகைச்சுவையுடன் பேசுபவர்கள் நல்ல மனிதர்களாகவும் மென்மையான மனம் படைத்தவர்களாகவும் தான் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
வாழ்க நகைச்சுவை! வாழ்க நகைச்சுவையாளர்கள்!
வாழ்க வளமுடன்!
Post a Comment