ஏழரை சனி என்றாலே எல்லோரும் பீதியடைவது  நிஜம். ஏழரை சனி எல்லோரையும் நிச்சயம் பாதிக்குமா? அதன் தீய விளைவுகளிலிருந்து தப்பவே  முடியாதா? ஏழரை சனிக்கு நாம் எல்லோரும் பயப் படத்தான் வேண்டுமா? மேலே படியுங்கள்....


ஏழரை சனி எப்பொழுது ஒருவருக்கு வரும்? ஒருவரின் ராசிக்கு 12 ல் சனி வரும் போது ஒருவருக்கு ஏழரை சனி ஆரம்பிக்கும். ராசிக்கு 12 இல் அது இரண்டரை ஆண்டுகள் இருந்த பின் அவரது ராசியில்  இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்யும். அதன் பின் சனி அவரின் ராசிக்கு இரண்டில் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்யும். ஆக, சனி உங்கள் ராசிக்கு 12 இல், ராசியில் மற்றும் ராசிக்கு 2 இல் சஞ்சரிக்கும் ஏழரை ஆண்டுகளையே ஏழரை சனி என்று சொல்லுகிறோம். இந்த ஏழரை சனி  எல்லோரையும் பாதிக்குமா?

ஏழரை சனி எல்லோரையும் பாதிக்காது என்பது தான் உண்மை. நல்ல தசா புத்தி நடப்பவர்களுக்கு ஏழரை சனி நிச்சயம் பாதிக்காது. உதாரணமாக, துலாம் லக்னத்தாருக்கு சனி கும்பத்திலிருந்து தசையை நடத்தினால் நிச்சயம் ஏழரை சனி பாதிக்காது.  அதுவும் புதனுடன் சனி கும்பத்தில் கூடி தசையை நடத்தினால்  நிறைய நன்மைகள் தான் நடக்கும். 

 பொதுவாக துலாம்  ராசிக்காரர்களுக்கும், ரிஷப ராசிக்காரகளுக்கும் ஏழரை சனி அதிகம் பாதிக்காது.

சரி, ஏழரை சனியின் தீய பலன்களிலிருந்து தப்புவது எப்படி?  விநாயகரையும், ஆஞ்சநேயரையும் தவறாமல் வழி படுங்கள். சனிக்கிழமை கட்டாயம் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் இடுங்கள். உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். வீட்டில்  காயத்ரி மந்திரம் மற்றும் ஓம் மந்திரம் தினசரி ஒலிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். காக்கைக்கு தினசரி உணவளியுங்கள். கால் ஊனமானவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்!




Post a Comment

 
Top