உங்களுக்கு உங்களிடம் பல விஷயங்கள் பிடித்திருக்கும். அதே சமயம் சில விஷயங்கள் உங்களுக்கு உங்களிடம் பிடிக்காமலும் இருக்கும். உங்களிடம் உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்கள் எவை எவை என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? மேலே படியுங்கள்.....


ஒவ்வொருவரும் தங்களின் பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றே நினைக்கின்றேன். முதலில் உங்களுக்கு உங்களிடம் பிடித்த விஷயங்களை பட்டியலிடுங்கள். உங்களுக்கு உங்களிடம் பிடித்த விஷயங்கள் உங்கள் உடல் தோற்றமாக இருக்கலாம். நீங்கள் உடை அணியும் விதமாக இருக்கலாம். உங்கள் பேச்சுத் திறமையாக இருக்கலாம். அல்லது உங்கள் நகைச்சுவை உணர்வாக கூட இருக்கலாம். உங்கள் திறமைகளை  நீங்கள் மேலும் மெருகேற்றி உங்கள் வாழ்க்கையில் முன்னேறி செல்ல இந்த சுய மதிப்பீடு உதவும்.

உங்களுக்கு உங்களிடம் பிடிக்காத விஷயங்களையும் நீங்கள் பட்டியலிட வேண்டும். அப்பொழுது தான் உங்கள் பலவீனங்கள் உங்களுக்குப் புலப்படும். உங்கள் பலவீனங்களை பலங்களாக மாற்றுங்கள். உதாரணமாக, உங்களுக்கு அதிகமாக செலவு செய்யும் குணம் இருக்கலாம். அதை நீங்கள் குறைத்துக் கொள்ளுவது உங்களுக்கு நலம் செய்யும் தானே?

உங்களின் பிடித்த பிடிக்காத விஷயங்களைப் பட்டியலிடும் போது நீங்கள் முன்னேற செய்ய வேண்டிய விஷயங்களும், கை விட வேண்டிய விஷயங்களும் தெரிய வரும். இந்த சுய மதிப்பீடு உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்றால் அது மிகையாகாது.

வாழ்க வளமுடன்!

உங்கள்  வாழ்க்கையின் 3 முக்கிய விஷயங்கள்   

வயது என்பது வெறும் எண் தானா?

Post a Comment

 
Top