ஒவ்வொரு மனிதரும் ஒரு புதிர் என்றே சொல்ல வேண்டும். எல்லா மனிதர்களும் சுயநலவாதிகளே. இருந்தாலும் நாம் எல்லோரையும் அரவணைத்து தான் செல்ல வேண்டும். ஒரு சிலர் அனுசரித்துப் போகவே முடியாதவர்களாக இருக்கலாம். இனான் பொதுவாக எல்லோரையும் அனுசரித்துப் போகக் கூடியவன் தான். இருந்தாலும், என்னாலும் சகிக்க முடியாத அந்த 7 நபர்களைப் பற்றி இந்த வலைப் பதிவில் பதிவு செய்கிறேன். மேலே படியுங்கள்.....


1. என்னால் சகிக்கவே முடியாதவர்கள் யாரென்றால் நன்றி மறப்பவர்கள் தான். அதுவும் தக்க நேரத்தில் உதவி செய்தவர்களை மறப்பவர்களை என்னால் மன்னிக்கவே முடியாது. நன்றி இல்லாதவர்கள் என்னைப் பொருத்தமட்டில்  தொழு நோயாளிகளை விட அருவெறுப்பானவர்கள்.

2. மற்றவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாத ஜென்மங்களை பற்றி என்ன சொல்லுவது? அடுத்தவருக்கு வேண்டுமே என்று நினைக்காமல் இருப்பதை எல்லாம் சாப்பிடும் மனிதர்கள், அடுத்தவர்களின் சௌகரியத்தைப பற்றி சற்றும் நினைக்காமல் தங்கள் சௌகரியத்தை மட்டும் பார்க்கும் மனிதர்களை என்னால் ஜீரணிக்கவே முடியாது.

3. நம்ப வைத்துக்  கழுத்தை அறுப்பவர்களை என்னால் சகிக்கவே முடியாது.

4. எப்பொழுதும் யாரையாவது எதையாவது குறை கூறிக் கொண்டே இருப்பவர்கள் சகிக்க முடியாதவர்களே.

5. பெற்றோர்களையும் பெரியவர்களையும் மதிக்காதவர்கள்.

6. பலவீனமானவர்களை கிண்டலடிப்பவர்கள்.

7. சோம்பேறிகள்.

மன்னிப்பாயா?

உங்களை நீங்களே கொண்டாடிக் கொள்ளுங்கள் 
21 Mar 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top