இந்தியா இன்று மென்பொருள் உற்பத்தியில் தலை சிறந்து விளங்குகிறது.  
நமது பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. நமது வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. நமது இந்தியர்கள் அங்கெங்கெனாதபடி எங்கும் எல்லா நாடுகளிலும் பரவி உள்ளனர். ஏன் அமெரிக்காவிலேயே நம் இந்தியர்கள் மிகப் பெரிய பதவிகளில் பட்டையை கிளப்பி வருகின்றனர்.  இந்தியாவின் பெருமை அதிகரித்து வருகிறதா? மேலே படியுங்கள்.....


ஒரு முறை பில் கேட்ஸிடம் ஒரு நிருபர் 'ஒரு வேளை இனி இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய முடியாது என்று ஒரு சட்டம் வந்தால் என்ன செய்வீர்கள்' என்று கேட்டதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் 'என் ஆபீசை பங்களுருக்கு  மாற்றுவேன்' என்றார். அந்த அளவுக்கு இந்தியர்களின் முக்கியத்துவம் அவர் கம்பெனியில் உள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியா வல்லரசாகி விடும் என்கின்றார்கள் வல்லுனர்கள்.  இந்தியாவின் பெருமை உண்மையில் அதிகரித்து வருகிறதா?

முதலில் இந்தியாவின் உண்மையான பெருமை என்ன என்பதை பார்ப்போம். இந்தியா ஆன்மீகத்தில் பெரும் வளர்ச்சி அடைந்த நாடு. ஆன்மீகத்தில் உலகத்திலேயே முதன்மையான நாடாக இருந்தது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. 'யோகா' வையும் இந்தியா தான் உலகுக்கு வழங்கியது.  ஆனால் இன்று? போலிச் சாமியார்களையும், யோகாவை விற்கும் போலி குருக்களையும் தான் அதிகம் பார்க்க முடிகிறது. 

இந்தியா பெரியவர்களை மதிக்கும் உயரிய கலாச்சாரத்தைக் கொண்டிருந்தது. ஆனால் இன்று? பெற்றோர்களையே முதியோர் இல்லத்தில் விடும் கொடுமையான வழக்கம் அதிகரித்து வருகின்றது. கணவன் மனைவி கடைசி வரை பிரியாமல் அன்யோன்யமாய் வாழும் உயரிய கலாச்சாரம் நம்முடையது. ஆனால் இன்று? ஹனிமூன் முடியுமுன் விவாக இரத்துக்குக்காக கோர்ட் வாயிலில் நிற்கும் இளம் ஜோடிகளை இன்று பார்க்கிறோம். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை தருவதில்லை இன்று. விருந்தோம்பல் குறைந்து வருகிறது. கூட்டுக் குடும்ப கலாச்சாரம் அழிந்து வருகிறது. 

இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்திருக்கலாம். ஆனால் இந்தியாவின் பெருமை? அது குன்றி வருகிறது என்பதே கசப்பான உண்மை.

வாழ்க வளமுடன்!




Post a Comment

 
Top