முதுமை என்பது தவிர்க்க முடியாதது. எல்லா இளைஞர்களும் ஒரு நாள் முதியவர்களாகத்தான் வேண்டும்.  நிறைய பேர் வயதான பின் எல்லாம் முடிந்து விட்டதாகவும், எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவும்  நினைக்கிறார்கள்.  வாழ்க்கையில் உற்சாகத்தை தொலைத்து விட்டு மரணத்திற்காக காத்து இருக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் எவ்வளவு வயதானாலும், தங்களை இளைஞர்களாகவே பாவிக்கிறார்கள்.  அவர்கள் தங்கள் சந்தோஷத்தை இழப்பதில்லை . உற்சாகத்தை  தொலைப்பதில்லை. அவர்களுக்கு வயது என்பது வெறும் எண் தானா? மேலே படியுங்கள்......

 நடிகை ரேகா பிரியங்கா சோப்ராவுடன்: 


வயதாகும் போது நம் உடலில் நிறைய மாற்றங்கள் உண்டாகின்றன என்பது நிஜம். உடலின் ஆற்றல் குறைந்து விடும். ஆனால் மனதை மாற்றம் அடையாமல் வைத்துக் கொள்ள முடியும்  நீங்கள்  நினைத்தால். அதாவது நீங்கள் உங்களை இளைஞராக மனதார  நினைத்தால் உங்கள் உடல் அதிக முதிர்ச்சியை அடைவதில்லை என்பது நிஜம். இன்னும் சொல்லப் போனால் மனத்தால் இளைஞராக வாழ்பவர்கள் அதிக வருடங்கள் உயிர் வாழ்கிறர்கள் என்பது அறிவியல் உண்மை. 

 ஹாலிவுட் நடிகை டெமி மூர்: 


80 வயதில் வானத்தில் பல்டி அடிக்கும் முதியவர்களும் இருக்கிறார்கள். 20 வயதில் கட்டிலில் முடங்கி கிடக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள் இந்த உலகில். 60 வயதுக்கு பின் பல துணிவான விளையாட்டுகளை கற்றுக் கொள்கிறார்கள் சில முதியவர்கள். இன்னும் சிலர் வயதான பின்னும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். என்றும் இளைமையாக உணர்பவர்கள் அதிக நாட்கள் உயிர்  வாழ்கிறார்கள். அவர்கள் கடைசி வரை உற்சாகத்துடனும், பயனுள்ளபடியும் வாழ்கின்றனர். 

நடிகை ரேகா இன்றும் எவ்வளவு இளமையுடன் இருக்கிறார்? கமல் ஹாசனை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு இன்னும் இளமை ஊஞ்சலாடவில்லையா?  ஹேமமாலினி, ஜிதேந்திரா, தர்மேந்திரா, டெமி மூர், சாண்டிரா புல்லக் , மடோன்னா, சிவக் குமார் என்று எத்தனை பிரபலங்கள்  முதியவர்கள் ஆனாலும், இன்றைய இளைஞர்களை விட இளைஞர்களாக தோன்றுகிறார்கள்?  யோகா செய்பவர்கள் எத்தனை பேர் இளமையுடன் கடைசி வரை வாழ்கிறார்கள்?  

வயது என்பது வெறும் எண் தான். உடலுக்கு வயதாவதை தடுக்க இயலாது என்பது உண்மை. ஆனால் உங்கள் மனதை நீங்கள் என்றும் இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்பது நிஜம். உங்கள் மனது இளமையாக இருந்தால், உடலும் ஓரளவுக்கு இளமையாகத் தான்  இருக்கும். 

மறந்து விடாதீர்கள், வயது என்பது வெறும் எண் தான்.

வாழ்க வளமுடன்!




வரவுக்கு செலவா? செலவுக்கு வரவா?

ஒரு குழந்தையைப் போல் மகிழ்ச்சியாய் வாழ்வது எப்படி?

Post a Comment

 
Top