நாம் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை  செய்வது மிகவும் நல்லது. ஆனால் இப்பொழுதெல்லாம் ஒருவருக்கொருவர் உதவிசெய்துக் கொள்ளுவது என்பது குறைந்து வருகிறது என்றே தோன்றுகிறது. மக்கள் எல்லோரும் தனிமைப் படுத்தப்பட்டு விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் தனித்  தனி தீவாக வாழ்கிறார்கள் என்பது கொடுமையான உண்மை ஆகும். நாம் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு பலவிதங்களில் உதவலாம். ஆனால் பண உதவியை மட்டும் தான் இன்று மக்கள் முக்கியமான உதவியாக கருதுகிறார்கள். பண உதவி மட்டும் தான் உதவியா? மற்ற உதவிகள் எல்லாம் உதவிகள் இல்லையா? மேலே படியுங்கள்.....


நாம் பண உதவி  நம்மால் முடிந்த அளவு தான் பண்ண முடியும். விரலுக்குத் தக்க வீக்கம் என்பது போல் நம் வருமானத்திற்கேற்ப தான் நாமும் பண உதவி நமக்கு வேண்டியவர்களுக்குப் பண்ண முடியும். ஆனால் நம்மால் வேறு நிறைய உதவிகள் நமக்கு வேண்டியவர்களுக்குப் பண்ண முடியும். நமது நேரம், உடல் உழைப்பு, அறிவுரை, ஆலோசனை இவற்றால் மற்றவர்களுக்கு உதவ முடியும்.

உதாரணமாக ஒருவர் நோய் வாய்ப் பட்டிருந்தால், நாம் அவர்கள் கூட இருந்து அவர்களை அக்கறையுடன் கவனித்துக் கொண்டால் அது நாம் அவர்களுக்கு செய்யும் பேருதவியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு சிலரை நாம் நல்ல முறையில் அறிவுரைக் கூறி அவர்கள் வாழ்க்கையையே நல் வழியில் திசை திருப்பலாம். ஒருவர் செய்யாத குற்றத்திற்காகவோ அல்லது சந்தர்ப்பங்களின் சூழ்நிலைகளினாலோ சிறைக்கு செல்லவேண்டியதிருந்தால் அவருக்கு அந்த கஷ்டக் காலத்தில் நீங்கள் பக்க பலமாக இருந்தால் அது அவர்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும் அல்லவா?

நீங்கள் உங்கள் நேரத்தை பிறருடைய நனமைக்காக  செலவு செய்யும் போது அது அவர்களுக்கு உதவிவாக இருக்க முடியும் என்பதை மறுக்க இயலாது. நம்முடைய உடல் உழைப்பாலும் நாம் பிறருக்கு பெரிய அளவில் உதவ முடியும்.

பண உதவி மட்டும் தான் உதவியா? நிச்சயம் இல்லை. மற்ற உதவிகளும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து பெரிய உதவிகளாக விளங்க முடியும் என்பது நிஜம்.

வாழ்க வளமுடன்!  

நன்றி கெட்ட உலகமடா சாமி!

உங்கள் இலட்சியங்களை நீங்கள் ஏன் அடைய முடியவில்லை?

Post a Comment

 
Top