நாம் தெரிந்தோ தெரியாமலோ இந்த உலகில் பிறந்து விட்டோம். அநேகர் எந்த குறிக்கோளும் இல்லாமலே வாழ்ந்து மறைந்து விடுகின்றனர். சிலர் வாழ்க்கையில் சில இலட்சியங்களைக் கொண்டு வாழ்கின்றனர். அதிலும் ஒரு சிலரே அந்த இலட்சியங்களை அடைகின்றனர். நம் வாழ்க்கை எப்பொழுது அர்த்தமுள்ளதாக இருக்கிறது? உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறதா? மேலே படியுங்கள்......
நிறைய சம்பாதிப்பதும், குழந்தைகள் பெறுவதும், அவர்களை ஆளாக்குவதும் தான் வாழ்க்கையின் குறிக்கோள்களாக எல்லோரும் வைத்திருக்கின்றனர். குழந்தைகளுக்காக வாழும்போது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதற்கும் மேல் வாழ்க்கையில் பல விஷயங்கள் உள்ளன.
நாம் நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்யும் போது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது. உதாரணமாக, நன்றாக படிக்கும் ஒரு ஏழை மாணவனுக்கு நீங்கள் பொருள் உதவி செய்தால் உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது. மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் ஒரு நல்லவருக்கு நீங்கள் பண உதவி செய்தால் அது உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. சண்டை போட்டுக் கொண்டு விவாக ரத்து வாங்கத் துடிக்கும் ஒரு ஜோடியை நீங்கள் சமாதானப் படுத்தி அவர்களை மீண்டும் ஒற்றுமையாய் வாழ வைக்கும் போது உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.
நீங்கள் உங்களை அறிந்து, பின் அந்த பரம் பொருளை அறிந்தால் உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மட்டுமல்ல, முழுமையடையவும் செய்கிறது என்றால் அது மிகையாகாது. அது சரி, எப்படி நாம் நம்மையும், கடவுளையும் அறிவது? அது ஒரு நீண்ட ஆன்மிக பயணமாக இருக்கும். கடுமையான தியானத்தின் மூலம் நாம் நம் வாழ்க்கையின் முழு பலன்களையும் அடையலாம். நம் வாழ்க்கை அப்பொழுது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது நிஜம்.
வாழ்க வளமுடன்!
Post a Comment