பேசுவது என்பது ஒரு அற்புதமான கலை என்றே சொல்ல வேண்டும். நாம் என்ன நினைக்கின்றோமோ அதை எளிமையாக எல்லோருக்கும் புரியும் படி பேசுவது என்பது ஒரு கலை தான். அதுவும், அதில் கொஞ்சம் நகைச்சுவை கலந்து சுவாரசியமாக பேசுவது என்பது ஒரு சிலருக்கே கை கூடும் அற்புத கலை ஆகும். அப்படி இரசிக்கும்படி பேசுபவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். நீங்கள் சுவாரசியமாக பேசக்கூடியவரா? மேலே படியுங்கள்....
நாம் எத்தனையோ இடங்களில் மற்றவருடன் பேச வேண்டியதிருக்கிறது. அது அலுவலகமாக இருக்கலாம். அல்லது இரயில் அல்லது பேருந்தாக இருக்கலாம். அல்லது ஒரு ஹோட்டல் ஆக இருக்கலாம். அல்லது நமக்கு வேண்டியவர்கள் நமக்கு அறிமுகப்படுத்தியவர்களுடன் பேசும் சூழ் நிலையாக இருக்கலாம். நாம் அவர்களுடன் எப்படி சுவாரசியமாக உரையாடுவது?
பொதுவாகவே எல்லோருக்கும் அவர்களின் பெயர் மிகவும் முக்கியம் ஆகும். அவர்களின் பெயரை நினைவில் வைத்து தேவைப் படும் போது அவர்களை பெயர் சொல்லி அழைத்து பேசும் போது அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள இணக்கம் அதிகரிக்கும் என்பது நிஜம். எல்லோரும் அவர்களைப் பற்றி பேசுவதையும் பேசப் படுவதையுமே விரும்புவார்கள். நீங்கள் உங்கள் சுய புராணத்தை மணிக் கணக்கில் அவிழ்த்து விட்டீர்களென்றால் அடுத்த முறை உங்களை அவர் பார்த்தால் ஓடி ஒளிவார் என்பது சர்வ நிச்சயம்.
அவர்களின் விருப்பம் எதில் இருக்கிறது என்று கணித்து உரையாட வேண்டும். எல்லோருக்கும் பொதுவாகவே அவர்களின் குழந்தைகளைப் பற்றி சொல்ல சொன்னால் மணிக் கணக்கில் சலிக்காமல் பேசுவார்கள். ஒரு சிலருக்கு சினிமா பற்றி பேச பிடிக்கும். ஒரு சிலருக்கு அரசியல். பேசும் போது விவாதங்களை தவிர்த்து விடுங்கள். விவாதத்தில் மட்டும் தான் வெற்றி பெற்றவரும் நஷ்டப் படுவார். நல்ல நண்பர்களை அல்லது உறவுகளை இழப்பார்.
பொதுவாக உரையாடும் போது மற்றவர்கள் மனம் புண்படாதவாறு உரையாட வேண்டும். உரையாடும் போது, மற்றவர்களிடமிருந்து பல விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இனிமையாக சிரித்த முகத்துடன் பேசினால் எல்லோரும் உங்களை விரும்புவார்கள்.
நீங்கள் சுவாரசியமாக பேச கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்ததை எளிதில் சாதிக்கலாம். எல்லோரும் உங்களை மிகவும் விரும்புவார்கள்.
வாழ்க வளமுடன்!
நீங்கள் கடினமாக உழைக்கத்தான் வேண்டுமா?
உங்கள் இலட்சியங்களை ஏன் அடைய முடியவில்லை?

Post a Comment