சில சமயங்களில் நாம் மௌனத்தைக் கடைப் பிடிக்க வேண்டி உள்ளது.  அது நம் வாழ்க்கைத் துணையிடம் இருக்கலாம். அல்லது காதலன் அல்லது காதலியிடம் நாம் இந்த மௌனத்தைக் கடைப் பிடிக்கலாம்.  நம் மேலதிகாரியிடம் மௌனமாக இருக்க வேண்டியிருக்கலாம். உண்மையில்  மௌனமும் ஒரு மொழி தான். சில சமயங்களில் மௌனம் வார்த்தைகளை விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும். மேலே படியுங்கள்.....


சில சமயங்களில் மௌனம் சிறந்த பதிலாக இருக்கக் கூடும். காதலியை முதன் உதலில் தொட விரும்பிய  காதலன்  'உன் கையை  பிடித்துக் கொள்ளவா' என்று கேட்டதற்கு அவள் மௌனமாய் இருந்தால், இதற்கு இவ்வளவு நேரமா, சீக்கிரம் பிடியேன் என்கின்ற பதில் அதில் தொக்கியிருக்கும் அல்லவா? ஊடலில் பேசாமல் மௌனமாய்  இருந்து பின் அது கூடலில் முடியும் போது  போது அவர்களது மௌனமும் அவர்கள் காதலை வளர்க்கத்தானே செய்கிறது?

சில சமயங்களில் வார்த்தைகள் கிடைக்காதபோது மௌனம் சிறந்த மொழியாகிறது என்பது நிஜம். அதிகமாய் உணர்ச்சி வசப்படும் போது வார்த்தைகள் வராது. ஆனால், அங்கு மௌனம் சத்தத்துடன் ஆட்சி செய்யும். 

கோபித்துக் கொண்டு மௌனம் காத்த காதலியைப் பார்த்து காதலன் கேட்டான், ' எதற்காக இந்த மௌனம்' என்று. ரொம்ப நேரம் கழித்து காதலி சொன்னாள் , ' என் மௌனத்திற்கு உனக்கு காரணம் தெரியவில்லை என்றால் என் வார்த்தைகளும் உனக்குப் புரியாது' என்று. என்ன உண்மையான வார்த்தைகள்?

சில சமயங்களில் கண்கள் பேசும், வாய் மௌனமாக இருக்க நேரும் போது. இளங் காதலர்களுக்கு இந்த அனுபவம் அடிக்கடி ஏற்படும். ஞானிகள் அதிகம் பேச மாட்டார்கள். மௌனம் தான் அவர்களின் பிரதான மொழி ஆகும். மணிரத்னம் படத்தில் அதிக வசனங்கள் இருக்காது. 'மௌன ராகம்' படத்தின் வெற்றி அந்த மௌனத்தில் தானே இருந்தது?

எதுவுமே அளவோடு இருந்தால் தான் பெருமை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகிப் போகும். மௌனத்தை அளவோடு பிரயோகிக்க வேண்டும். தேவைப் படும் இடங்களில் மட்டும் சரியாக பயன் படுத்தினால் மௌனம் சிறந்த மொழியாக உபயோகப் படும் உங்களுக்கு.

ஆம். மௌனமும் ஒரு மொழி தான்.

வாழ்க வளமுடன்!

மன்னிப்பாயா?

அடங்கா மனமே அடங்கு 

Post a Comment

 
Top