' மெட்டுக்கு பாட்டா? பாட்டுக்கு மெட்டா?' -மெட்டுக்கு பாட்டு எழுதணுமா? அல்லது பாட்டுக்கு மெட்டு போட வேணுமா? என்று சினிமாத் துறையினர் அடிக்கடி விவாதித்துக் கொள்வார்கள். அது போல் வரவுக்குத் தகுந்த மாதிரி செலவுகள் செய்ய வேண்டுமா? அல்லது செலவுகளுக்கு ஏற்றாற்போல் வரவைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமா? வரவுக்கு செலவா? செலவுக்கு வரவா? மேலே படியுங்கள்..........


சிலர் வாழ்க்கையில் சிறிய ரிஸ்க் கூட எடுக்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் அதனால் பெரிய அளவில்  சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அந்த குறைந்த வருமானத்திற்குள் தங்களது  செலவுகளைக் கட்டுப் படுத்திக் கொள்வார்கள். இது சரியான அணுகுமுறையா என்று சொல்ல முடியாது. ஆனால் இது வருமானத்திற்கு மேல் செலவு செய்வதை விட எவ்வளவோ மேல் என்பது மட்டும் நிஜம்.

ஒரு சிலர் ரிஸ்க் எடுக்கத் தயங்க மாட்டார்கள். அவர்கள் நல்ல வசதிகளோடு வாழ விரும்புவார்கள். பெரிய வீட்டில் வசிக்க வேண்டும், அழகான காரில் போக வேண்டும், நல்ல உணவு உண்ண வேண்டும், ஆடம்பரமான உடைகள் அணிய வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் வசதிகளோடு வாழ்வதற்காக கொஞ்சம் ரிஸ்க் எடுத்து செலவுகளை வேண்டுமென்றே அதிகப் படுத்திக் கொள்வார்கள்.  ஏன் என்றால் அதற்கு ஏற்றார் போல் வரவை பெருக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்குத்  தானாகவே வந்து சேர்ந்து விடுமல்லவா? அதற்காக. அவர்கள் கடுமையாக உழைத்தே ஆக வேண்டிய நிலைமையில்  இருப்பதால் மிகக் கடினமாக உழைப்பார்கள். மற்றவர்கள் அவர்களைப் பார்த்து 'அகலக் கால் வைக்கிறான், மாட்டப் போகிறான் பார்' என்று எல்லாம் விமர்சிப்பார்கள். ஆனால் அவர்கள் அதற்கெல்லாம் கவலைப் படாமல் உழைத்து வரவைப் பெருக்கி ஊர் வாயை அடைப்பார்கள்.

வரவுக்கு செலவா? செலவுக்கு வரவா? அது உங்களைப் பொறுத்து தான்  இருக்கிறது. நீங்கள் ரிஸ்க் எடுக்கும் தைரியம் உள்ளவர் என்றால், டென்ஷன் தாங்கும் மனப் பக்குவம் உடையவர் என்றால், உழைக்கத் தயங்காதவர் என்றால் செலவுகளைப் பெருக்கி கொண்டு அதற்கு ஏற்றார் போல் பின் வரவுகளையும் பெருக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் ரிஸ்க் எடுக்க தயங்குபவர் என்றால் வரவுக்கு ஏற்றார் போல், செலவுகளை செய்து வருவது சாலச் சிறந்தது.

வாழ்க வளமுடன்!

உங்கள் பணப் பிரச்சினைக்குத் தீர்வுகள் 

அனாவசிய செலவுகளைத்  தவிர்ப்பது எப்படி?

Post a Comment

 
Top