July 18, 2025 12:45:04 AM Menu
 

காதலும் காமமும் ஒன்று போல் சிலருக்குத் தோன்றலாம். அவர்களுக்குக் காதலில் காமத்தைக் கடந்து யோசிக்கத் தெரியாது. திருவள்ளுவர் கூட காமத்துப்பாலில் தான் காதலைப்பற்றி எழுதி இருக்கிறார். ஆனால் காதல் வேறு. காமம் வேறு என்பதில் எந்த ஐயமும் வேண்டாம். மேலே படியுங்கள்..



எல்லாக் காதலும் காமத்தில் தான் ஆரம்பிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் காமம் காதலாக மாற வேண்டும். அது தான் அந்த காதலுக்கு மரியாதை. காதலிப்பவர்களுக்கும் மரியாதை. துரதிர்டவசமாக  எல்லா காமமும் காதலில் முடிவதில்லை. காதல் இல்லை வெறும் காமம் தான் மிஞ்சி இருக்கிறது என்று தெரிந்தால் அதை விட்டு வெளி வந்து விடுவது நல்லது.
.
காதலுக்கும்  காமத்திற்கும் உள்ள வேறுபாடுகள்  பற்றி பார்க்கலாம். இருவரில்  ஒருவரோ அல்லது இருவருமோ உடல் தாண்டி சிந்திக்க முடிய வில்லை என்றால் அது நிச்சயம் காமம் மட்டும் தான். அவர்கள் காரியம் முடிந்த அடுத்த நிமிடமே கழன்று கொள்ளத் தான்  நினைப்பார்கள். அவர்களால் நிகழ்ச்சி முடிந்த பின் சேர்ந்து இருக்கவே முடியாது.

காதல் அப்படி அல்ல. அதற்குப் பின்னும் பிரிய விரும்ப மாட்டார்கள். இருவரும் சேர்ந்து இருக்கும் போது பாதுகாப்பாக உணர்வார்கள். மற்றவருக்குத்  தம் மீது அக்கறை இருக்கிறது என்பதை அவர்களால் எளிதாக உணர முடியும்.  அதிக நேரத்தை இருவரும் சேர்ந்து செலவழிக்கவே விரும்புவார்கள். துணையின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். அவர்கள் துன்பப் படும் போது  துடித்துப் போய் விடுவார்கள். அவர்கள் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்காகவும்அயராது  பாடு படுவார்கள்.

2 நாட்கள் பிரிய நேர்ந்தாலும் அவர்களுக்கு ஒன்றுமே ஓடாது. ஏதோ உயிரே பிரிந்து விட்டது போல் இருப்பார்கள். அவர்களுக்காக எந்த தியாகமும் செய்யத் தயாராக இருப்பார்கள். அவர்களுக்காக எவ்வளவு செலவு செய்தாலும் தனக்கு செலவு செய்தது போல் உணருவார்கள். அவர்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பார்க்கவே அவர்களுக்குப்  பயமாக இருக்கும். 

அவர்களைப் பற்றி வேறு யாராவது குறை கூறினால் அவர்களுக்கு தாங்கிக் கொள்ளவே முடியாது.

எதற்கு வளர்ப்பானேன்? எளிதாகவே சொல்லி விடுகிறேனே. உங்கள் துணை உங்களுக்குப் பிடித்த விஷயங்களை எல்லாம் செய்ய பெரு முயற்சி எடுத்தால் அது காதல். உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை எல்லாம் முடிந்தமட்டிலும் தவிர்த்தால் அது காதல். எவ்வளவு நேரம் உங்கள் முகத்தைப் பார்த்தாலும் அவர்களுக்கு சலிக்கவே சலிக்காது. மூட் வரும் போது மட்டும் பல் இளித்தால் அது காமம் மட்டுமே.

அப்பாடா , வாலன்டைன்ஸ் டேக்கு ஏத்த மாதிரி  ஒரு வலைப் பதிவு எழுதி விட்டேன்.

ஹாப்பி வாலன்டைன்ஸ் டே!

வாழ்க காதல்! வாழ்க காதலர்கள்!

வாழ்க வளமுடன்!


மன்னிப்பாயா?

நீங்கள் உங்கள் ஆத்ம துணையுடன் (Soulmate) தான் வாழ்கிறீர்களா?





                                            



14 Feb 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top