திருமணம் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய மிகப் பெரிய நிகழ்வு ஆகும். திருமணம் நம் வாழ்க்கையைப் புரட்டிபோட்டு விடுகிறது என்பது நிஜம். திருமணம், நம் வாழ்க்கை முறை, இலட்சியங்கள், பழக்கவழக்கங்கள் முதலியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா?  திருமணத்திற்குப் பின் நாம் மாறுகிறோமா? மேலே படியுங்கள்....


திருமணத்திற்கு பின், ஆணும் பெண்ணும் நிறையவே மாறிப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது. திருமணமான புதிதில் இருவரும்  இல்லற இன்பத்தில் மூழ்கித்  திளைக்கிறார்கள். புதுப் புது அனுபவங்கள் இன்பங்கள் என்று வாழ்வே ஒரேயடியாக மாறித் தான் போகிறது. வாழ்வின் பொற்காலம் அது என்றால் அது மிகையாகாது. மோகம் ஓரளவு தீர்ந்த பின் வாழ்வில் பொறுப்புகள் கூடியிருப்பதை இருவருமே உணருகிறார்கள்.

ஆண்,  பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமே என்கின்ற   பொறுப்பு  உணர்ச்சி பெறுகிறான். இன்று பெண்ணும், பணம் சம்பாதிக்க வேண்டும், குடும்பப் பளுவைத் தானும் சுமக்க வேண்டும் என்று உழைக்கிறாள். வீடு வாங்க வேண்டும் , கார் வாங்க வேண்டும், குழந்தைகளை நல்ல பள்ளிக் கூடங்களில் சேர்க்க வேண்டும், வெளி நாடுகள் பார்க்க வேண்டும் என்று எத்தனை எத்தனையோ ஆசைகள், இலட்சியங்கள் அவர்களுக்கு வந்து சேருகின்றன.

ஆண் தன நண்பர்களை முன் போல் அதிகம் பார்ப்பதில்லை. அவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை.  ஆண்  கல்யாணத்திற்கு பின் ஒரு கட்டுப் பாட்டுடன் வாழ ஆரம்பிக்கிறான் என்பது நிஜம். பெண்ணோ தன்  பிறந்த வீட்டை விட்டு விட்டு முற்றிலும் புது வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறாள். புது இடம், புது உறவினர்கள், புது வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் என்று சகலமும் அவளுக்கு மாறித் தான் போகிறது. ஆனாலும் , கணவன் என்னும் கடலை சேர்ந்த நதியாக அவள் ஆகி விடுகிறாள் என்பது நிதர்சனமான உண்மை. 

இருவருமே திருமணத்திற்கு பின் வெகுவாக மாறுகிறார்கள் என்று சொல்லி முடிக்கிறேன். வாழ்க வளமுடன்!

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

ஓரினத் திருமணம் சரியா?


Post a Comment

 
Top