பயம் என்பது ஒரு கொடுமையான எதிர்மறையான உணர்வு ஆகும். பயம் இல்லாத உயிரினமே இல்லை என்று அடித்து சொல்லலாம். மிகவும் தைரியசாலிகளான மனிதர்களும் உண்மையில் உள்ளுக்குள் பயப்படத்தான் செய்கிறார்கள். அவர்களால் பயத்தை மறைத்து தைரியமாக செயல் படமுடிவதால் வீர்ர்களாக மதிக்கப்படுகிறார்கள், அவ்வளவு தான். ஓரளவுக்கு பயம் இருக்கலாம். ஆனால் அதுவே அதிகமாகிப் போனால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். உங்களின் பயங்களுக்கான உண்மையான காரணங்கள் என்ன?, பயங்களைப் போக்கும் எளிதான வழிகள் யாவை? மேலே படியுங்கள்....
பயம் என்பது என்ன? ஏதோ ஒரு ஆபத்தான விஷயம் நடக்கப் போகிறது, யாரோ ஒருவரால் அல்லது ஏதோ ஒரு விஷயத்தால் ஏதோ ஒரு ஆபத்து அல்லது கஷ்டம் அல்லது வலி ஏற்படப் போகிறது என்கின்ற ஒரு எதிர் மறையான எண்ணம் தூண்டப்படுவது தான் பயம் என்னும் எதிர்மறை உணர்வு ஆகும்.
எத்தனையோ விதமான பயங்கள் மனிதரிடம் உள்ளன கமல் ஒரு படத்தில் சொல்லுவது போல். மரண பயம், நோய் பயம் , வலி பயம், இருட்டு பயம், கூட்டத்தைப் பார்த்து பயம், மேடையில் நின்றால் பயம், விமானத்தில் பயணிக்க பயம், தண்ணீர் பயம், உயர பயம், பாம்பு பயம், வசதிகள் போய் விடுமோ என்று எத்தனையோ பயங்கள் மனிதனை ஆட்டுவிக்கின்றன என்பது நிஜம்.
எதனால் பயம் ஏற்படுகிறது? பற்று இருப்பதால் தான் பயம் உண்டாகிறது. உயிர் மேல் பற்று இருப்பதால் மரண பயம் ஏற்படுகிறது. மரண பயத்தால் பலவிதமான பயங்கள் ஏற்படுகின்றன. பணம் இல்லாமல் போய் விடுமோ என்கின்ற பயம் பலரை ஆட்டுவித்துக் கொண்டு தான் இருக்கின்றது. தினம் தினம் பலர் உயிரோடே செத்துப்பிழைக்கின்றனர் என்பது பரிதாபத்திற்குரியது தானே?
பயத்தை எப்படி போக்குவது? பயத்தை ஒரே நாளில் ஒழித்து விட முடியாது. எந்த விஷயம் பயமாக இருக்கிறதோ அந்த விஷயத்தை மெதுவாக செய்து பழகவேண்டும். இருட்டு பயம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தனியாக இருட்டில் சென்று பழக வேண்டும். தைரியமானவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிக்கடி படிக்கலாம். தைரியமானவர்களோடு பழகலாம். எல்லாவற்றையும் விட எளிதான வழி தியானம் தான். தினசரி தியானம் செய்து வந்தால், மனம் பலப் படும். மனதில் உள்ள பயங்கள் நீங்கும் என்பது உறுதி.
வாழ்க வளமுடன்!
உங்கள் விதியின் 5 விதிகள்
முக்கோண வெற்றி சூத்திரம்

அருமை
ReplyDelete