ஒரு குழந்தை இப்பூவுலகிற்கு வந்து முதல் அழுகை அழுகின்ற போது அதன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. நன்றாக படிக்குமா, நல்ல தொழில் செய்யுமா, நல்ல குணங்களுடன் வாழுமா, ஆயுள் தீர்க்கமா, நல்ல குடும்ப வாழ்க்கை அமையுமா, எதுவுமே நமக்குத் தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். பிறந்த அந்த குழந்தை ஒரு நாள் நிச்சயம் மறித்து போகும் என்பது தான் அது. அது ஒன்று தான் நிச்சயமான ஒன்று ஆகும். ஜோதிடர்கள் ஓரளவுக்கு உங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி கணித்துக் கூறலாம். ஆனால் நூத்துக்கு நூறு சரியாக எந்த சோதிடராலும் கணிக்க இயலாது என்பது தான் நிஜம். நாம் ஒவ்வொரு வினாடியும் நம் கல்லறையை நோக்கித் தானே பயணித்துக் கொண்டிருக்கிறோம்?  இறக்கத்தானே இவ்வுலகில் பிறந்திருக்கிறோம்? மேலே படியுங்கள்......

a


மனித வாழ்க்கை என்பது ஒரு நீர்க்குமிழி போல் குறுகியது. கண் மூடி கண் திறப்பதற்குள் நம் வாழ்க்கை இறுதிக் கட்டத்திற்கு வந்து விடும். இந்த குறுகிய வாழ்வில் தான் எத்தனை சண்டைகள்? பொறாமைகள்? வெறுப்புகள்? கோபங்கள்? யோசித்துப் பார்த்தால் இந்த எதிர்மறை உணர்வுகள் எவ்வளவு அபத்தமானது என்பது நமக்குப் புரியும்.

இந்த குறுகிய வாழ்க்கையில் நாம் எல்லோரிடமும் அன்பாக இருக்கலாமே? சந்தோஷமாக சிரித்து வாழ்வை ஓட்டலாமே? எதற்கு முகத்தை தூக்கி வைத்தக் கொண்டு எல்லோரிடமும் பகைத்துக் கொண்டு மன அழுத்தத்துடனும் , மன சஞ்சலத்துடனும் வாழ வேண்டும்? நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்? குரோதங்களையும், பகை உணர்ச்சியையும் நெஞ்சில் உரமிட்டு ஏன் வளர்க்க வேண்டும்?

நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எல்லோரிடமும் அன்பாக இருப்போம். பொன்னான நேரத்தை வீணாக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல் படுவோம். அச்சம், கோபம், பொறாமை, சோம்பேறித்தனம், பகை உணர்ச்சி இவற்றை தவிர்ப்போம். பயனுள்ள வாழ்க்கை வாழ்வோம்.

வாழ்க வளமுடன்!

பணப் பிரச்சினைக்குத் தீர்வு 

ஆசைப் படுவது தவறா?

Post a Comment

 
Top