மனம் என்பது மிகவும் முக்கியமான விஷயம் என்பதை நாம் உணரவேண்டும். நம் மனதில் நல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் வந்தால் நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்படும். நமக்கு ஏற்படும் தொடர்ச்சியான எண்ணங்களையே நாம் மனம் என்கின்றோம். மனதில் நல்ல ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் தோன்றினால் உங்கள் வாழ்க்கையில் வெற்றிகளும் சந்தோஷங்களும் வந்து சேரும். ஆனால் நம்மில் பலர் கோபம், பொறாமை, பயம், வெறுப்பு போன்ற எதிர்மறையான விஷயங்களையே மனதில் உரமிட்டு வளர்க்கின்றனர். உங்கள் மனம் என்ன குப்பைத் தொட்டியா அசிங்கமான, அசுத்தமான விஷயங்களை போட்டு வைக்க? மேலே படியுங்கள்....
நம் மனதின் எண்ணங்கள் தாம் நம் வாழ்வை நிர்ணயிக்கிறது என்பது நிஜம். நல்ல எண்ணங்கள் நல்ல வாழ்க்கையைத் தருகிறது. தீய எண்ணங்கள் தோல்விகளையும் துன்பங்களையுமே தருகிறது. மனம் என்பது ஒரு புனிதமான அமுதசுரபி. அங்கு நல்ல எண்ணங்களையும், நல்ல நினைவுகளையும் வைக்க வைக்க, வெற்றிகளையும் சந்தோஷங்களையும் எடுக்க எடுக்க குறையாமல் மனம் வாரி வழங்கிக் கொண்டே இருக்கும்.
அதே சமயம் மனதில் தீய எண்ணங்களையும், எதிர் மறை எண்ணங்களையும் போட போட தோல்விகளும் துக்கங்களும் வந்து கொண்டே இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.
ஆகவே தான் எப்பொழுதுமே நேர்மறை விஷயங்களைப் பற்றியே பேச வேண்டும் என்கிறார்கள். "இல்லை, நடக்காது, முடியாது" போன்ற எதிர்மறை எண்ணங்களை தவிருங்கள். எல்லோரிடமும் அன்பாய் இருங்கள்.
வாழ்க வளமுடன்!
Post a Comment