வார்த்தைகளுக்கு சக்தி அதிகம் என்பது உண்மை. கோபமாக பேசும் சில வார்த்தைகள் ஒரு நெருங்கிய உறவைக் கூட சிதைத்து விடலாம். நீங்கள் தவறான  உங்கள் வேலை போகலாம். உங்கள் வியாபாரம் பாதிக்கப்படலாம். எத்தனையோ நஷ்டங்கள் ஏற்படலாம். இந்த 6 தருணங்களில் வாயை மூடிக் கொள்வது சாலச் சிறந்தது என்று நினைக்கின்றேன்.




இந்த 6 தருணங்களில் வாயை மூடிக் கொள்வது சாலச் சிறந்தது

1. உங்களின் கணவனோடோ அல்லது மனைவியோடோ அல்லது நெருங்கிய உறவினரோடோ அல்லது நண்பரோடோ சில சமயங்களில் சண்டை வரலாம். அவர்கள் மிகவும் கோபமாக இருந்தால் நீங்களும் கோபமாக பேசுவது உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். அவர்களின் கோபம் ஞாயமாகவும் இருக்கலாம் அல்லது அநியாயமாகவும் இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் நீங்கள் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. உங்கள் தரப்பு ஞாயத்தை மென்மையாக சிறுது நேரம் கழித்து உரைக்கலாம்.

2. அவர்கள் உங்களை அவமதித்திருக்கலாம். நீங்களும் கோபத்தில்
தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி விட்டால் பின்  அவ்வார்த்தைகளை நம்மால் திரும்ப பெற இயலாது.

3. யாரையாவது காயப்படுத்துவது போல் பேசும் நிலை வந்தால் கஷ்டப்பட்டாவது அதை அடக்கிக் கொள்ள வேண்டும்.

4. மற்றவர்கள் எந்த வழியிலாவது உங்களைக் காயப்படுத்தியிருக்கலாம். அதனால் நீங்கள் கடினமான வார்த்தைகளை பிரயோகம் செய்ய சலனப் படுவீர்கள் என்பது உண்மை தான். ஆனால் அத்தகைய தருணங்களில் வாயை மூடிக் கொள்வது தானே சாலச் சிறந்தது?

5. ஒரு சிலர் யாரையும் எளிதாக எடுத்தெறிந்து பேசி விட்டு பிறகு கவலைப் படுவார்கள்.

6. ஒரு சிலர் எல்லோரையும் விமர்சனம் பண்ணிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் மீது கடினமான வார்த்தைகளை உபயோகிக்க உங்கள் மனம் துடிக்கலாம். ஆனால் பொறுமை அவசியம். நாவை அடக்குவது மிகவும் நல்லது.

நாவை அடக்க முடியாவிட்டால் நஷ்டங்களும் கஷ்டங்களும் வரும் என்பது உறுதி. நாகாக்க. நல்லவை எல்லாம் நடக்கும். 

வாழ்க வளமுடன்!


எதிர்பாராததை எதிர்பாருங்கள் 

அவமதிப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையா?







Post a Comment

 
Top