நம்மில் பலர் மறு பிறப்பில் நம்பிக்கை உள்ளவர்களே. நம் பண்டைய முனிவர்கள் மறு பிறப்பு, பாவ புண்ணியங்கள் பற்றிய பல உண்மைகளை அறிந்து இவ்வுலகிற்கு உணர்த்தினார்கள். நாம் பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களின் படி நம்முடைய இந்த பிறவியின் வாழ்க்கை அமைகிறது. அது மட்டுமல்ல. நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களும் நம் வாழ்க்கையை ஓரளவிற்கு பாதிக்கத்தான் செய்யும். நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்கள் நம்மை சேருமா? மேலே படியுங்கள்......


நம் தந்தை, தாத்தா மற்றும் தாத்தாவின் அப்பா, தாத்தா போன்ற முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்கள் ஓரளவுக்கு நம் வாழ்க்கையை பாதிக்கத்தான் செய்யும். நம் முன்னோர்கள் சேர்த்து வைத்த நம் பூர்வீக சொத்துக்களை  எப்படி நாம் இன்று அனுபவிக்கிறோமோ அதே போல் அவர்கள் செய்த பாவங்களின் பலன்களையும் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்பது நமக்கு விதிக்கப் பட்ட விதி. சிலருக்கு அவர்களின் முன்னோர்கள் சொத்துக்கள் எதுவும் சேர்க்காமல் வெறும் பாவங்களை மட்டும் சேர்த்து வைத்து சென்றிருப்பார்கள். உண்மையில் பாவம் அவர்கள்.

குறைந்தது 5 தலைமுறை முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்கள் நம்மைத் தொடரும் என்பது நியதி. நம் முன்னோர்கள் புண்ணியங்கள் அதிகம் பண்ணியிருக்கிறார்களா? அல்லது பாவங்கள் அதிகம் பண்ணியிருக்கிறார்களா? உங்கள் ஜாதக கட்டத்தில் இதை நாம் ஓரளவுக்கு கண்டு அறியலாம்.

பூர்வபுண்ணிய ஸ்தானம் கெட்டிருந்தால் காசி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு சென்று வரலாம். உங்கள் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி கிரகம் எதுவோ அதற்கு ப்ரீத்தி செய்யலாம். அந்த கிரகத்திற்குரிய கடவுளை தினமும் வணங்கலாம். உதாரணமாக உங்கள் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி கிரகம் குரு என்றால் நீங்கள் தஷிணாமூர்த்தியை வணங்கலாம். காக்காவுக்கு தினமும் உணவு அளிக்கலாம். தினமும் வீட்டில் விளக்கேற்றி கடவுளை பக்தியுடன் வணங்கலாம்.

வாழ்க வளமுடன்!

மரணத்திற்கு பின் வாழ்க்கை இருக்கிறதா?

உங்கள் விதியின் 5 விதிகள் 


25 Feb 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top