June 21, 2025 05:10:16 PM Menu
 

சில முக்கியமான விஷயங்கள் வாழ்க்கையில் நமக்கு எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்கின்றன. ஆனால் நாம் அவற்றைப் பயன்படுத்துவதில்லை என்பது தான் துரதிர்ஷ்டம். நாம் சுவாசிக்கும் போது நம் உடலிலுள்ள எல்லா செல்களுக்கும், திசுக்களுக்கும், சுரப்பிகளுக்கும் ஆக்ஸிஜன் சென்று பின் கார்பன் டை ஆக்ஸைடாக வெளி செல்லுகின்றது என்பது உங்களுக்குத் தெரியும். அதிக அளவு ஆக்ஸிஜன் உள்  சென்றால் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகள் விளைகின்றன. சரியாக  சுவாசிக்கும் போது ஆக்ஸிஜன் அதிக அளவு உடலிலுள்ள எல்லா பகுதிகளுக்கும் செல்லுகின்றது. அது சரி,  சரியாக சுவாசிப்பது எப்படி? மேலே படியுங்கள்....


பிரணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி செய்யும் போது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. மனம் அமைதி பெறுகிறது. மன அழுத்தம் குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தினசரி பிராணாயாமம்  செய்பவர்களுக்கு நோய் வந்தால் அது தானாகவே எளிதாக குணமடைந்து விடும். 

 பிரணாயாமம் செய்வது எப்படி? கபாலபதி என்னும் மூச்சுப் பயிற்சி செய்யும்போது அதிக அளவு ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்கிறது. மேலும் உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் அதிக அளவில் நீங்கி விடுகின்றன. முதலில் கபாலபதி எப்படி செய்வது என்றுபார்ப்போம். நேராக முதுகு வளையாமல் உட்கார்ந்து கொள்ளுங்கள். மூச்சுக் காற்றை சாதரணமாக உள்ளே இழுங்கள். அதை வேகமாக வெளியே தள்ளுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் அடி வயிறு உள்ளே செல்லும். அது தான் நீங்கள் சரியாக செய்கிறீர்கள் என்பதற்கு சாட்சி. இதை சுமார் 20 முறை செய்யுங்கள். 

நாடி சுத்தி பிரணாயாமம்  செய்வது எப்படி? வலதுக்கை கட்டை விரலால் வலது மூக்குத் துவாரத்தை அடைத்துக் கொள்ளவும். இப்பொழுது இடது துவாரத்தின் மூலமாக காற்றை உள் இழுங்கள். இப்பொழுது உங்கள் வலதுக் கை மோதிர விரலால் இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு வலது துவாரத்தின் வழியாக காற்றை சற்று மெதுவாக வெளி விடுங்கள். இப்பொழுது வலது துவாரத்தின் மூலமாக காற்றை உள்  இழுத்து மீண்டும் இடது துவாரத்தின் வழியாக மெதுவாக காற்றை வெளி விடுங்கள். இது ஒரு சுற்று ஆகும். இது போல் நீங்கள் 10 முதல் 20 சுற்றுகள் வரை செய்யலாம்.

 பிரணாயாமம் செய்த பின் தியானம் செய்தால் எளிதாக மனம் தியானத்தில் லயிக்கும். தியானமும் செய்தால் பலன்கள் ரெட்டிப்பாகும்.

சரியாக சுவாசியுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

வாழ்க வளமுடன்!


                           

                                                                       

15 Feb 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top