ஒவ்வொருவரும் சில தனித் திறமைகள் பெற்றுள்ளோம் என்பதை யாரும் மறுக்க இயலாது.  எல்லோரிடமும் சில நல்ல குணங்களும் உள்ளன. சில கெட்ட குணங்களும் உள்ளன. உங்களின் குறை நிறைகள் உங்களுக்குத் தெரிந்தால் அது உங்களின் வாழக்கையின் வெற்றிக்கு மிகவும் உதவும். உங்களின் குறை நிறைகள் உங்களுக்குத்தெரியுமா? மேலே படியுங்கள்.....
                   

இறைவன் படைப்பில் நாம் எல்லோரும் சில தனித் திறமைகளைப் பெற்றே பிறந்துள்ளோம். ஒரு சிலர் நன்றாக பாடுவார்கள். சிலர் நன்றாக டான்ஸ்  ஆடுவார்கள். சிலர் கதை எழுதும் திறமைப் பெற்றுள்ளனர். சிலர் மேடையில் நன்றாக பேசும் திறமைப் பெற்றுள்ளனர். நீங்கள்  திறமைகளையும், குறைகளையும் நன்றாக அறிந்திருந்தால் அது உங்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். நீங்கள் உங்களுக்குப் பிடித்த, சரியான துறையைத் தேர்ந்தெடுக்கலாம். அதில்  நீங்கள் எளிதாக நிபுணர் ஆகலாம்.

நீங்கள் உங்களுக்கு வராத, பிடிக்காத துறையை தவிர்க்கலாம் அல்லவா? நீங்கள் நேர்மையானவர் என்றால் வக்கீல் துறையை தவிர்க்கலாம். மருத்துவத்  துறை உங்களுக்குப் பிடிக்க வில்லையென்றால் அந்த படிப்பையே தவிர்க்கலாமே.

உங்கள் குறைகள், நிறைகள், திறமைகள், பலவீனங்கள் தெரிந்தால் அதற்கேற்றார் போல் முடிவுகள் எடுக்கலாம். படிப்பையும், வேலையையும்  சரியாக தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் நன்றாக வாதம் பண்ணும் திறமை பெற்றிருந்தால் வக்கீலாகலாமே.

ஒரு சிலர்தங்களது பலம் எது, பலவீனம் எது என்றே தெரியாமல் கடைசி வரை வாழ்ந்து மடிகிறார்கள். அவர்களால் பெரிய வெற்றிகளை அடைந்திருக்க முடியாது என்பது நிஜம்.

உங்கள் குறைகள், நிறைகள், திறமைகள், பலவீனங்கள், பலங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள். அதற்கேற்றார் போல் தொழிலிலும், சொந்த வாழ்க்கையிலும் முடிவுகளை எடுங்கள். உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top