நண்பர்கள் நம் வாழ்கையில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் உண்மையான நண்பர்கள் என்று பார்த்தால் அவர்களில்ஒரு சிலரே தேறுவார்கள். உங்களின் உண்மையான நணபர்களைக் கண்டுபிடிப்பது எப்படி? மேலே படியுங்கள்....
உங்களின் உண்மையான நண்பர்களின் முக்கியமான குணமே உங்களுக்குப் பிரச்சினைகள் வரும் போது உங்களுடன் இருப்பது தான். எத்தனை நண்பர்கள் தங்களின் நண்பர்களின் காதலுக்காக எத்தனை ஆபத்துக்களை சந்தித்திருக்கிறார்கள்? பணப் பிரச்னையாகட்டும், அல்லது எந்த பிரச்சினை ஆனாலும் உண்மையான நண்பன் உங்களுடனே கடைசி வரை இருப்பான் என்பது நிஜம்.
உண்மையான நண்பன் உங்கள் கருத்துகளில் இருந்து வேறுபட்டாலும் விவாதங்களில் ஈடுபட்டாலும் அது உங்கள் நட்பை துளியும் பாதிக்காது என்பது தான் அந்த நட்பின் பலம் ஆகும். உண்மை நண்பரிடம் நீங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவிக்குக் கூட சொல்ல முடியாத இரகசியங்களையும் பகிர்ந்திருப்பீர்கள்.
உண்மை நண்பன் உங்களிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுடனே இருப்பான். அவன் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வலம் வருவான். அவன் உங்கள் சகோதரியை தன் சகோதரியாக பார்ப்பவன். உங்கள் தாயை தன் தாயாக நேசிப்பான். உங்கள் மனைவியை சகோதரியாக பாவிப்பான்.
உண்மையான நண்பர்கள் சாகும் வரை நம்முடன் வருபவர்கள். பாதியில் பிய்த்துக் கொண்டு போகின்றவர்கள் எல்லாம் உண்மையான நண்பர்கள் அல்லர் என்பதை உணரவும். உண்மையான நண்பர்கள் உங்களை நன்றாக புரிந்தவர்கள். உங்களின் விருப்பு வெறுப்புகளை நன்கு அறிந்தவர்கள். நீங்கள் தவறு செய்யும் போது எந்த வித தயக்கமோ பயமோ இல்லாமல் உங்களை தட்டிக் கேட்பார்கள். உங்களின் வெற்றிகளைக் கொண்டாடுவார்கள்.
தோல்விகளை தாங்கிக் கொள்ள உதவுவார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் உங்களுடன் இருக்கும் போது நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்வீர்கள். ஆயிரம் பேர் எதிர்த்து நின்றாலும் ஒரு உயிர் நண்பன் உங்கள் பக்கத்தில் இருந்தால் நீங்கள் பயமின்றி அவர்களை எதிர்த்து வெல்வீர்கள்.
நண்பன் இல்லாதவர்கள் என்னைப் பொறுத்தமட்டிலும் வாழத் தெரியாதவர்கள் என்றே சொல்லுவேன்.
நண்பேன்டா!
வாழ்க நட்பு! வாழ்க உண்மையான நண்பர்கள்!
வாழ்க வளமுடன்!
யார் ஆன்மிகவாதி?
நிராகரிப்பை நிராகரியுங்கள்

Post a Comment