'யோகா' நம் இந்திய முனிவர்களால் சுமார் 5000 வருங்களுக்கு முன்   கண்டுபிடிக்கப் பட்ட ஓர் அற்புதமான கலை ஆகும். யோகா செய்வதால் நம் உடலும் உள்ளமும் பலப்படும் என்பது நிஜம். நம் உடலிலுள்ள சுரப்பிகள் சரியான விகிதத்தில் ஹார்மோன்களை சுரப்பதால் நோய் இல்லா பெரு வாழ்வு வாழ முடியும். யோகா பயிற்சிகள் சுமார் ஒரு மணி நேரம் தினமும் பண்ணுவோர் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர். அவ்வளவு நேரம் இல்லாதவர்கள் சூரிய நமஸ்காரம் மட்டுமாவது பண்ணினால் நல்ல பலன்களைப்  பெறலாம். சூரிய நமஸ்காரம்  செய்வதனால் ஏற்படும் அற்புதமான பலன்கள் யாவை? மேலே படியுங்கள்.....



சூரிய நமஸ்காரம்  காலையில் சூரிய உதயத்தின் போது செய்தால் அதிக பலன்கள்  கிடைக்கும். சூரியன் இல்லாமல் இவ்வுலகில் உயிர்கள் வாழ இயலாது. அந்த சூரியனைக் காலையில் நமஸ்கரிப்பதன் மூலம் சூரியனின் அருளைப்  பரிபூரணமாக பெறலாம். நாம் சூர்ய சுழற்சியுடன் ஒத்துப் போவதால் பலவிதமான நன்மைகளைப் பெற முடியும்.

12 விதமான யோக நிலைகளைக் கொண்டது தான்  சூரிய நமஸ்காரம். சூரிய நமஸ்காரம் செய்வதின் மூலம் உங்கள் முதுகு எலும்பு பலப் படும். முதுகு வலி வராது. இருந்தால் குறையும். முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது என்பது உண்மை. உடலில் உள்ள விறைப்புத் தன்மையை நீக்கி உடலை  நெகிழ்வாக்குகிறது. மனதிற்கு புத்துணர்ச்சியையும் உடலுக்கு நல்ல சக்தியையும்  கொடுக்கிறது. உங்கள் உடலிலுள்ள மூட்டுக்கள், தசை நார்கள் இவற்றைப் பலப் படுத்துகிறது.

சூரிய நமஸ்காரம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மனதை அமைதி அடையச் செய்கிறது. நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. மேலும் நரம்பு மண்டலம், ஜீரண  மண்டலம் இதயம், போன்ற எல்லா முக்கிய உடல் அமைப்புகளையும் தூண்டி நன்றாக வேலை செய்ய உதவுகிறது. தைராயிட், பிட்யூட்டரி போன்ற சுரப்பிகள் சரிவர வேலை செய்ய உதவுகிறது.

மொத்தத்தில் சூரிய நமஸ்காரம் உங்கள் உடலையும் மனதையும் உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. நோயற்ற வாழ்வை  வாழவும் உதவுகிறது என்றால் அது மிகையாகாது.

வாழ்க  வளமுடன்!

உணவே மருந்தாக முடியுமா?

நாம் மருந்துகளைத் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகிறோமா?





Post a Comment

 
Top