இவ்வுலகில் எளிதாகவும் இலவசமாகவும் கிடைக்கும் ஒரு விஷயம் அறிவுரை தான். முக்கியமாக சொல்லவேண்டுமென்றால் கொஞ்சம் வயதானவர்கள் தான் அதிப்படியான அறிவுரைகளை இளைஞர்களுக்கு அள்ளித் தெளித்த வண்ணம் இருப்பார்கள். இதில் பெற்றோர்கள் சொல்லும் அறிவுரைகளை பொதுவாக பிள்ளைகள் கேட்பதேயில்லைஎன்பது உலக உண்மை. அறிவுரை கூறுபவர்கள் அந்த அறிவுரை கூறும் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டுமா? மேலே படியுங்கள்....


உதாரணமாக, குடிக்கும் இளைஞன் ஒருவனுக்கு  அதே குடிப்பழக்கம் உள்ள ஒருவர் அறிவுரை கூறினால் சரியாக இருக்குமா? அப்படிப் பட்ட ஒருவர் சொன்ன அறிவுரையை அந்த இளைஞன் கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? நிச்சயம் அப்படிப்பட்டவரின் அறிவுரைக்கு மரியாதை  கம்மியாகத்   தானிருக்கும் என்பது நிஜம். பெண்கள் விஷயத்தில் மிகவும் 'வீக்' ஆக இருக்குமொருவர் கற்பு பற்றி வாய் கிழியப் பேசினால் காமெடியாகத்தானே இருக்கும்?

150 கிலோ எடை உள்ளவர் ஸ்லிம்மாக இருக்க டிப்ஸ் கொடுத்தால் நம்புவீர்களா? தலையில் ஒற்றை முடி இல்லாதவர் முடி வளர ஆலோசனைக் கூறினால் விளங்குமா? வேலை இல்லாத ஒருவர் வேலைக் கிடைப்பதற்கு ஆலோசனைக் கூறினால் எந்த அளவுக்கு மக்கள் அதை மதிப்பார்கள்? 

வியாபாரத்தில் தோற்ற ஒருவர் நல்ல ஒரு வியாபார ஆலோசனைக் கூறினாலும் இந்த உலகம் அதை மதிக்காது. நம்பவும் நம்பாது என்பது தான் உண்மை. அதே சமயம் வியாபாரத்தில் வெற்றி பெற்ற ஒருவர் தவறான வியாபாரா ஆலோசனை சொன்னாலும் இந்த உலகம் அதை அப்படியே ஏற்கும்.

ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் புத்தி சொல்லுபவர் தகுதி உடையவராக இருப்பின் அதற்கு மதிப்பு அதிகம் தான் என்றே நினைக்கின்றேன். தகுதி இல்லாதவர் சொல்லும் புத்திமதிகள் செல்லாக்காசாகிப் போகவே வாய்ப்பு அதிகம் என்பது நிஜம்.

வாழ்க வளமுடன்!

உங்கள் வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிப்பது எது?

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?


Post a Comment

 
Top