பொதுவாக ஒருவருக்குத் திருமணம் தாமதமாகின்றது என்றால் அதற்குக் கிழ்க்க்கண்ட விஷயங்களே காரணங்களாக இருக்க முடியும்.
1. தகுதிக்கு மீறிய வரனைத் தேடுதல்.
2. நிறைய தகுதியான வரன்களை கழித்து விட்டு மேலும் நல்ல வரன் வரும் என்று நினைப்பது.
3. ஜாதி, மதம், நிறம் போன்றவற்றை தேவைக்கதிகமாக பார்ப்பது.
4. பொறுப்புகளை ஏற்க பயப்படுவது.
5. பெற்றோர்கள், சம்பாதிக்கும் பிள்ளைகளின் வருமானம் போய் விடுமே என்று வேண்டுமென்றே நல்ல வரன்களைத் தட்டிக் கழிப்பது.
6. ஜோதிடர்கள் அந்த தோஷம் இந்த தோஷம் என்று பெற்றோரை பயமுறுத்தி விடுவது.
இவை தான் பெரும்பாலும் திருமணம் தாமதப்படக் காரணமாக இருக்கின்றன.
அது சரி, ஜோதிட ரீதியாக ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ திருமணம் ஏன் தாமதப்படும்? மேலே படியுங்கள்....
1. ஏழாம் வீட்டில் சனி இருந்தால் திருமணம் தாமதப்படும். அதுவும் உபய லக்னக்காரர்களுக்கு சனி ஏழில் இருந்தால் திருமணம் நடக்க வாய்ப்புகள் மிகவும் கம்மி என்றே சொல்ல வேண்டும்.
2. ஏழாம் வீ ட்டில் கேது இருந்தால் அல்லது ராகு இருந்தால் திருமணம் தாமதமாகலாம். ஏழாம் வீ ட்டில் கேது இருந்தால் பிரச்சினைகளோடு திருமணம் நடந்தேறும்.
3. ஏழாம் வீ ட்டில் செவ்வாய் அல்லது சூரியன் இருந்தாலும் திருமணம் தாமதமாகலாம்.
4. ஏழாம் வீட்டு அதிபதி பன்னிரெண்டில் மறைந்தால் திருமணம் தடைபடும். மூன்றில் அல்லது, ஆறில் அல்லது எட்டில் மறைந்தாலும் தாமதமாகலாம்.
5. சுக்கிரன் மறைவு ஸ்தானங்களில் இருந்தால் திருமணம் தாமதமாகலாம்.
6. கேது பன்னிரெண்டாம் வீ ட்டில் இருந்தால் தாமத திருமணம் நடை பெறும்.
7. நீங்கள் பிறந்த தேதி 2 அல்லது 11, அல்லது 20 அல்லது 29, அல்லது 7 அல்லது 16 அல்லது 25 ஆக இருந்தால் திருமணம் லேட்டாகும்.
8. நீங்கள் பிறந்த நாள், மாதம், மற்றும் வருடத்தைக் கூட்டி வரும் எண்ணை ஒற்றை படை எண் வரும் வரை கூட்டினால் வரும் எண் 2 அல்லது 7 ஆக வந்தால் திருமணம் தாமதமாகும். அதாவது விதி எண் 2 அல்லது 7 ஆக இருந்தால் லேட் திருமணம் தான்.
உதாரணமாக ஒருவர் பிறந்த தேதி 15-12-1987 என்று வைத்துக் கொள்வோம்.
1+5+1+2+1+9+8+7=34
இதை மீண்டும் ஒற்றைப்படை எண் வரும் வரை கூட்ட,
3+4=7 இவரது விதி எண் 7 வருவதால் இவருக்குத் திருமணம் தாமதமாகும்.
Post a Comment