சரியாக முடிவு எடுப்பது என்பது உங்கள் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவும். சில சரியான முடிவுகள் உங்களுக்கு  வெற்றியைத் தருகிறது. சில தவறான முடிவுகள்  பெரிய தோல்விகளைத் தரக் கூடும். உதவும். வாழ்க்கையில் நீங்கள் எடுக்க வேண்டிய மூன்று முக்கிய முடிவுகள் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடும். மேலே படியுங்கள்....



நம் நாட்டில் பெற்றோர்களே பிள்ளைகளின் படிப்பை பெரும்பாலும் தீர்மானிக்கிறார்கள். அப்படி அவர்கள் பிள்ளைகளின் படிப்பைத் தீர்மானிக்கும் போது அவர்களின், விருப்பம், திறமைகள் இவற்றை எண்ணிப் பார்ப்பதில்லை. சொந்தக்காரர் சாப்ட்வேர் எஞ்சினீயர் ஒருவர் லட்சக்கணக்கில் சம்பாதித்தால் தம் பிள்ளைகளும் சாப்ட்வேர் எஞ்சினீயர் ஆக வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தி அந்த படிப்பை படிக்க வைக்கின்றனர். எனக்குத் தெரிந்து என் நண்பர்கள் எத்தனையோ பேர் விருப்பம் இல்லாமல் டாக்டராகவும்  எஞ்சினீயராகவும்  தொழில் செய்கிறார்கள். அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியாததற்கு அவர்கள் எடுத்த அந்த தவறான முடிவே காரணம். படிப்பில் சரியான முடிவு எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

அதே போல் நமது தொழில் அல்லது வேலையை சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமது பெற்றோர்களுக்காகவோ அல்லது வேறு பண நிர்பந்தங்களுக்காகவோ நாம் தொழிலை தேர்வு செய்தால் அதில் பெரிய வெற்றிகளை நிச்சயம் காண முடியவே முடியாது என்பது நிஜம். தொழில் அல்லது வேலை விஷயத்தில் சரியான முடிவுகளை எடுங்கள்.

நாம் மிகவும் முக்கியமாக முடிவு எடுக்க வேண்டிய இன்னொரு விஷயம் நமது திருமணம் தான். வாழ்க்கைத் துணையை தேர்தேடுக்கும் போது சரியான முடிவை எடுக்க வேண்டும். பெற்றோர்களுக்காகவோ அல்லது வேறு ஏதாவது நிர்பந்தங்களுக்காகவோ பிடிக்காத வாழ்க்கையைத் தேர்தெடுக்கக் கூடாது. உங்களுக்குப் பிடித்த, உங்கள் எண்ணங்களுக்கும், விருப்பங்களுக்கும் ஒத்துப் போகும் இணக்கமான நபரைத் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நாம் வாழ்க்கையில் மிகவும் யோசித்து சரியாக எடுக்க வேண்டிய  முக்கியமான 3 முடிவுகள் படிப்பு, தொழில் மற்றும் திருமணம் சம்பந்தமாகத் தான் என்றால் அது மிகையாகாது.

என்ன, நான் சொல்வது சரிதானே?

வாழ்க வளமுடன்!

உங்கள் இலட்சியங்களை நீங்கள் ஏன்  அடைய முடியவில்லை?

அனாவசிய செலவுகளைத்  தவிர்ப்பது எப்படி 

Post a Comment

 
Top