திருமணத்திற்கு மணமகன் அல்லது மணமகளை தேடும் போது சில தேவை இல்லாத மூட நம்பிக்கைகளினால் பல கல்யாணங்கள் தடைபடுகின்றன அல்லது தாமதப் படுகின்றன  என்பது ஒரு கொடுமையான உண்மை. மூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாதாம்.  ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாதாம். கேட்டை நட்சத்திரம் பெரிய மைத்துனருக்கு ஆகாதாம். விசாகம் சின்ன மைத்துனருக்கு ஆகாதாம். மூலம், கேட்டை, ஆயில்யம், விசாகம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த எத்தனையோ ஆண்களும் பெண்களும் இன்று திருமணம் ஆகாமல் வயதாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதற்கு எந்தவிதமான  விஞ்ஞான நிருபணமும் இல்லை என்பது நிஜம். மூலம், ஆயில்யம் மாமனார் மாமியாருக்கு ஆகாதா?மேலே படியுங்கள்....



இன்று இந்தவிதமான தேவை இல்லாத பயங்கள் மக்கள் மத்தியில் வந்ததற்குக் காரணமே காசு பண்ண ஏமாந்தவர்களைப் பயமுறுத்தும் அரை குறை ஜோதிடர்களே. பொத்தாம் பொதுவாக அவர்கள் இப்படி மூலம் மாமனாருக்கு ஆகாது, ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்று போகிற போக்கில் சொல்லி விட்டு போய் விடுகிறார்கள். ஆனால், நல்ல வரன்களை எத்தனையோ பேர் இழந்து வாழ்க்கையையே வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் அவலம்.

அது சரி, ஜோதிடம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்த எல்லோரும் மாமனாரின் உயிருக்கு எமனாவதில்லை. மூலம் நட்சத்திரத்தில் முதலாம் பாதத்தில் பிறந்தவர்கள் மட்டுமே, அதுவும் பெண்கள் மட்டுமே மாமனாரின் ஆயுளுக்கு பங்கம் விளைவிக்கக்  கூடும். அதே போல் ஆயில்யம் முதல் பாதத்தில் பிறந்த பெண்கள் மட்டுமே மாமியாருக்குப் பாதகம் ஏற்படுத்தலாம். ஆண்களுக்கு இந்த தோஷம் இல்லவே இல்லை. கேட்டையில் முதல் பாதத்தில் பிறந்த பெண்கள் மூத்த மைத்துனருக்கும், விசாகம் நான்காம் பாதத்தில்  பிறந்த பெண்கள் சின்ன மைத்துனருக்கும் சில பாதிப்புகளை  ஏற்படுத்தலாம் என்று தான் ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது. நிச்சயம் கொன்று விடும் என்று சொல்ல வில்லை.

இந்த சின்ன விஷயம்  புரியாமல் எத்தனை கல்யாணங்கள் தடைபடுகின்றன? எத்தனை நல்ல சம்பந்தங்கள் நின்று விடுகின்றன? எத்தனை பேர் முதிர் கன்னிகளாக வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்? எத்தனை ஆண்கள் வயதாகியும் பிரம்மச்சாரிகளாய் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்?

தேவையா இந்த அவலம்? தேவையற்ற பயத்தை நீக்குவோம். உண்மையான ஜோதிட அறிவைப் பெறுவோம். செம்மையான வாழ்க்கையை வாழ்வோம்.

வாழ்க வளமுடன்!

கிரகங்களைப் பற்றிய சில சுவையான செய்திகள் 

முக்கியமாக கடைப் பிடிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள் 

25 Jan 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top