Google+ Followers

 

இன்று மேல் தட்டு மற்றும் நடுத்தர மக்கள் எல்லோருமே இணைய  (Internet) இணைப்பு வைத்திருக்கிறார்கள். எல்லோரும் இன்று தங்களது வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்று நிறையவே முயற்சிகள்  செய்கின்றனர். அவர்கள்  இணைய தளம் மூலம் பணம் சம்பாதிக்க ஆசைப் படுவது இயல்பு தானே?  அனால், உண்மையில் இணைய தளம் மூலம் பணம் சம்பாதிக்கமுடியுமா? மேலே படியுங்கள்....


இணையத்தைப் பயன்படுத்தி நாம் எத்தனையோ காரியங்களை எளிதில்  செய்கிறோம். இன்று இணையத்தில் இல்லாதது என்றும் ஒன்றும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அப்படி இருக்கும்பொழுது சம்பாதிக்கும் வாய்ப்பு மட்டும் இல்லாமல் இருக்க முடியுமா என்ன? ஆம், இணைய தளம் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிச்சயம் உள்ளன. ஆனால் அதே சமயம் நிறைய ஏமாற்று வேலைகளும் இணையத்தில் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கின்றன. ஆதலால் மக்கள் இணையதளம் மூலம் சம்பாதிக்கலாம் என்கின்ற நம்பிக்கையையே இழந்து வருகின்றனர் என்பது  நிஜம்.

உங்களுக்கு ஆங்கிலத்தில் எழுதும் திறமை இருந்தால் எளிதாக இணையதளத்தில் சம்பாதிக்கலாம். நீங்கள் (Blogger) என்னும் இலவச மென் பொருளைப் பயன்படுத்தி பணமே செலவு செய்யாமல் உங்களின் வலைப் பதிவை (Blog) ஆரம்பிக்கலாம். அந்த வலைப் பதிவில் அடிக்கடி எழுதி  நீங்கள் கூகிள் அட் சென்ஸ் (Google ad sense) மூலம் பணம் சம்பாதிக்கலாம். மேலும் இணைப்பு சந்தைப் படுத்துதல்(Affiliate marketing)  மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம். மேலும் ஆய்வுகள் (surveys) மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம். மேலும் தனிப்பட்ட எழுதும் வேலைகள் (Freelance writing jobs) மூலமாகவும் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

மேலும் உங்களுக்கு எந்த துறையில் நிபுணத்துவம் இருக்கிறதோ அந்த துறையில் பணம் இணையத்தளம் மூலம் சம்பாதிக்கலாம்.  Web Designing, Programming, photography போன்ற தொழில் தெரிந்தவர்கள் இணையதளம் மூலமாக நிறைய சம்பாதிக்க வாய்ப்புகள் நிச்சயம் உள்ளன என்றே சொல்ல வேண்டும்.

இணையதளத்தில் எல்லோ வாய்ப்புகளுமே நிச்சயம் உள்ளன. அவற்றை கண்டுபிடிப்பது சற்று சிரமம் தான். அதே சமயம் அது அப்படி ஒன்றும் பெரிய ராக்கெட் விஞ்ஞானமும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முயன்றால் கண்டிப்பாக இணைய தளம் மூலமாக நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அதே சமயம் நீங்கள் ஏமாற்றுபவர்களின் வலையில் சிக்காமல் சரியான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும்.

இணைய தளத்தின் மூலம் நிச்சயம் பணம் சம்பாதிக்க இயலும் என்பதே என்னுடைய அனுபவத்தில் நான் கண்ட உண்மை ஆகும்.

உங்கள் பணப் பிரச்சினைக்குத் தீர்வு 

இணைய தளத்தில் தேவைக்கு அதிகமான தகவல்கள் 

Post a Comment

 
Top