நீங்கள்  'ஆயில் புல்லிங்' பற்றிக் கேள்விப் பட்டிருக்கலாம். அதனால் ஏற்படும் நற்பலன்கள் பலவற்றையும் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.  'ஆயில் புல்லிங்'  என்றால் என்ன? அதை நாம் செய்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?  அறிந்து கொள்ள மேலே படியுங்கள்.....



'ஆயில் புல்லிங்' என்பது நம் இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் சுமார் 3000 ஆண்டுகளாக கடை பிடிக்கப் பட்டு வருகிறது. காலை எழுந்தவுடன் பல் துலக்குவதற்கு முன் 'ஆயில் புல்லிங்' செய்ய வேண்டும். செக்கில் ஆட்டிய இயற்கை நல்லெண்ணெய் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் எடுத்து வாயில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதை பற்களுக்கிடையே  கொப்புளிப்பது போல் சுமார் 10 லிருந்து 20 நிமிடம் பண்ணுங்கள். கனமாக இருந்த எண்ணெய் லேசாகி மஞ்சள் நிறம் வெண்மை நிறமாக மாறியிருக்கும். எண்ணெய் லேசாகிய உணர்வு வந்த பின் எண்ணையை வெளியே துப்பி விடுங்கள். எண்ணையை முழுங்கக்  கூடாது. பின் வெதுவெதுப்பான வெந்நீரால் வாயைக் கொப்புளியுங்கள்.

'ஆயில் புல்லிங்' தினமும் செய்வதால் நமக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றன. முக்கியமாக வாய் சுகாதாரம் மிகவும் மேம்படும். வாயிலுள்ள பாக்டீரியாக்கள் பெருமளவில் நீக்கப்படுகின்றன. பல் சொத்தை ஆகாமல் இருக்கவும், சொத்தைப் பல்லின் கெடுதல்களை குறைக்கவும் உதவுகிறது. மேலும் உங்களின் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ஆகும். பயோரியா போன்ற ஈறு நோய்களைக் கட்டுப்படுத்தும்.

'ஆயில் புல்லிங்' நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துகிறது.நச்சுப் பொருட்களை உடலிலிருந்து நீக்குகிறது. சிலவிதமான தோல் நோய்கள், தலைவலிகள், கீல் வாதம், ஆஸ்துமா, கல்லீரல் பிரச்சினைகள், தொற்றுகள், ஹார்மோன்கள்  சம நிலைமை இல்லாமை போன்றவற்றிற்கு  'ஆயில் புல்லிங்'  மிகவும் நல்லது. மேலும் பல் இயற்கையாகவே வெண்மையாக பளிச்சிடும் 'ஆயில் புல்லிங்'  பண்ணுவதால்.

கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்: 'ஆயில் புல்லிங்'  பல் துலக்குவதற்கு முன் செய்யவும். எண்ணையின் நிறம் மாறி லேசாகும் வரை 'swish' செய்ய வேண்டும். அந்த எண்ணையை விழுங்கக் கூடாது. 'ஆயில் புல்லிங்'  பண்ணிய பின் ப்ளோரைட் இல்லாத பற்பசையில் பல் விளக்கவும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் சிறந்த பலனைத் தரும்.

வாழ்க வளமுடன்!

ஜலதோஷத்திலிருந்து தப்பிக்க சில எளிய வழிகள் 

நோயில்லாமல் வாழ சில எளிதான குறிப்புகள் 






Post a Comment

 
Top