பணக்காரர் ஆவதற்கு யார் தான் விரும்ப மாட்டார்கள்? நிறைய பேர் பணக்காரர் ஆக விரும்புகிறார்கள். அதில் ஒரு சிலர் அதற்கான கடினமான முயற்சிகளை எடுக்கிறார்கள். பலர் வெறும் கனவுகளுடனே வாழ்ந்து மடிகிறார்கள். நீங்கள் பணக்காரர் ஆவதற்கு உங்கள் முயற்சி மட்டும் போதாது. மற்றவரின் உதவியும் ஆதரவும் நிச்சயம் தேவை. நீங்கள் பணக்காரர் ஆவதற்கு உங்கள் வாழ்க்கைத் துணையின் உதவி தேவையா? மேலே படியுங்கள்.....
உங்கள் கணவரோ அல்லது மனைவியோ நிச்சயம் நீங்கள் பணக்காரர் ஆவதற்கு உதவ முடியும். உண்மையில் நிறைய பேர் பணக்காரர் ஆகும் ஆசையையே தங்கள் துணையிடம் இருந்து தான் பெறுகிறார்கள். உங்கள் கணவனோ அல்லது மனைவியோ உங்களுக்கு பணக்காரர் ஆகும் ஆசையை மிகவும் ஆழமாக உங்கள் மனதில் விதைக்க முடியும். மேலும் உங்களுக்கு உங்கள் முயற்சிகளில் உதவ முடியும். நீங்கள் தோல்வியில் துவண்டிருக்கும் போது உங்களுக்கு தெம்பையும் நம்பிக்கையையும் ஊட்ட முடியும்.
சிலர் பணக்கார ஆணையோ அல்லது பெண்ணையோ மணந்து பணக்காரர் ஆகி விடுகின்றனர். அது ஒரு பெரிய சாதனை அல்ல. ஆனால் தன் துணையின் பணத்தை ஆரம்பத்தில் பயன்படுத்தி மேலும் தன முயற்சியால் பெரும் பணக்காரர ஆகி விடும் சிலர் போற்றுதற்குரியவர்களே.
உங்கள் வாழ்க்கைத் துணை உங்களின் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் உங்களுக்கு பலவிதங்களில் உதவியாகவும் ஆதரவாகவும் இருக்க முடியும். பலர் பல தோல்விகளை சந்தித்து பின் தான் செல்வந்தர் ஆகிறார்கள். அது வரை, வறுமையில் வாடிய போதும் அவர்களுக்கு பக்க பலமாக இருந்து அவர்களின் நம்பிக்கையை தகர்க்காமல், மேலும் மேலும் ஊக்கப்படுத்தி வெற்றி அடையச் செய்வார்கள்.
ஒரு சிலர் ஊக்கமோ அல்லது ஆதரவோ கொடுக்கா விட்டாலும் தங்கள் துணையை தொந்தரவு பண்ணாமல் இருப்பார்கள். அதுவே ஒரு பெரிய அதவி தானே?
ஆக, உங்கள் வாழ்க்கைத் துணை நிச்சயம் நீங்கள் பணக்காரர் ஆவதற்கு மிகவும் உதவியாக இருக்க முடியும் என்பது நிஜம்.
வாழ்க வளமுடன்!
உங்கள் பணப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
நீங்கள் விரும்பியதை எல்லாம் அடைவது எப்படி?

Post a Comment