நம் உடல் அவ்வப்பொழுது நமக்கு உடல் சரியின்மை பற்றி எச்சரிக்கைகள் அனுப்பிக்கொண்டிருக்கிறது. நாம் இதை அலட்சியப்படுத்தாமல் உடனுக்குடன் கவனித்தால் பெரிய உபாதைகளிலிருந்து தப்பிக்கலாம். அவை என்ன? கீழே காணவும்.



 1) சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு பதிலாக அழுத்தமான மஞ்சள் நிறத்திலோ அல்லது ரத்தம் கலந்ததாகவோ இருப்பது. கல்லீரல் அல்லது சிறுநீரகக் கோளாறாகவோ இருக்கலாம்.

2) தினசரி மலம் கழிக்காமல் இருப்பது. இது அஜீரணத்தையும் குடலின் வறண்டதன்மையும் குறிக்கும். கவனிக்காமல் இருந்தால் பல நோய்களுக்கு இது வித்தாக அமையும்.

3) உதடு வெடிப்பு: அடிக்கடி உதடு வெடித்தால் அதை களிம்பு தடவி மறைக்காதீர்கள். பதிலாக அதிக நீர் பருகுங்கள்.

 4) எப்போதும் சோர்வுடன் இருப்பது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. தூக்கமின்மை, தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமல் இருப்பது, மதுபானங்கள் அதிகமாக அருந்துவது, செயற்கையாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகமாக உண்பது முதலியன.

 5) சருமத்தில் வெடிப்புகளோ, சிரங்குகளோ, தேமலோ அல்லது படையோ அடிக்கடி காணப்பட்டால் அது உடலின் நோய் எதிர்ப்பின்மையையும் மன உளைச்சலையும் குறிக்கலாம்.

6) பருவம் மாறும்போதெல்லாம் உங்களுக்கு ஜலதோஷம், மூக்கடைப்பு முதலியவை தொந்தரவு படுத்துகின்றனவா? உங்கள் நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகப்படுத்திக்கொள்ளும் வழியை தேடுங்கள்.

http://healthfreaksdiary.weebly.com/

Post a Comment

 
Top