கடினமாக உழைப்பவர்கள் எல்லாம் நன்றாக பணம் சம்பாதிப்பார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அப்படி என்றால் ஏழைகள் எல்லோரும் கடினமாக உழைக்காதவர்களா என்கின்ற சந்தேகம் நமக்குத் தானாக எழகிறது அல்லவா? அதே சமயம் கடினமாக உழைப்பவர்களெல்லாம் கண்டிப்பாக பணக்காரர் ஆகி விடுவார்களா என்கின்ற கேள்வியும் வருகிறது. ஒருவர் ஏழையாகவோ அல்லது பணக்காரராகவோ இருப்பதற்கு கடின உழைப்பு அல்லது சோம்பேறித்தனம் மட்டும் காரணம் இல்லை என்றே தோன்றுகிறது. மேலே படியுங்கள்......
ஒன்று மட்டும் நாம் நிச்சயமாக சொல்லலாம். அதாவது பணக்காரனாக உயர்ந்தவர்கள் எல்லோரும் கடினமாக உழைத்தவர்களே. ஆயிரத்தில் ஒருவர் அதிகம் உழைக்காமலே பணக்காரராகி இருக்கலாம். அது விதி விலக்கு. விதி விலக்குகள் விதிகளாக முடியாதல்லவா? பொதுவாக கடினமாக உழைப்பவர்கள் பணக்காரராகிறார்கள். அதே போல் கடினமாக உழைப்பவர்கள் தான் பணக்காரராக நிலைக்கின்றனர்.
அது சரி, ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கின்றனர்? அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஏழைகள் பிறப்பால் ஏழைகளாகப் பிறந்திருக்கலாம். அவர்களுக்குப் பணக்காரனாகும் வழி தெரியாமல் இருந்திருக்கலாம். போதிய புத்திசாலித்தனம் இல்லாமலிருக்கலாம். பிறரின் ஆதரவு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அல்லது விதி அவர்கள் வாழ்க்கையில் சதி செய்திருக்கலாம். பெரிய அளவில் பணக்காரனாகும் இலட்சியம் இல்லாமலிருந்திருக்கலாம். போதிய உழைப்பு உழைக்காமல் இருந்திருக்கலாம்.
ஆக பொதுவாக ஏழைகள் எல்லோரும் சோம்பேறிகள் என்று முடிவு கட்டுவது சரியானது அல்ல. அவர்கள் கடினமாக உழைக்காததால் தான் ஏழைகளாக இருக்கிறார்கள் என்று சொல்லுவதும் சரியாகாது என்றே நினைக்கின்றேன். அதே போல் பணக்காரர்கள் எல்லோரும் கடின உழைப்பாளிகள் என்றும் நாம் உறுதியாகக் கூற முடியாது என்பதே நிஜம். அழிக்க முடியாத அளவுக்கு தந்தை சொத்து சேர்த்திருந்தால் அந்த பிள்ளை சோம்பேறியாக இருந்தாலும் பணக்காரனாக வாழ முடியும் அல்லவா?
அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது எப்படி?
நோயில்லாமல் வாழ்வது எப்படி?

Post a Comment