சரியான உணவு: நமக்கு வரும் வியாதிகளில் பெரும்பாலானவை நமது தவறான உணவு பழக்க வழக்கங்களினால் தான் என்று சொல்லுகிறார்கள். அது உண்மை தான் என்றே தோன்றுகிறது. சரியான உணவை சரியான முறைகளில் உட்கொண்டால் நமக்கு நோய் வராது என்பது நிஜம்.


சீரான உணவு: நாம் உண்ணும் உணவில் நம் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். சத்துக்கள் அதிகமாகவும் இருக்கக்கூடாது.   குறைவாகவும் இருக்கக் கூடாது. எல்லாவிதமான சுவைகளும் நாம் நம் உணவில் சேர்த்தால் தானாகவே எல்லா சத்துக்களும் நமக்குக் கிடைத்து விடும். அதாவது, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு போன்ற எல்லா சுவைகளும் நம் உணவில் இருக்குமாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான உணவை தினமும் எடுத்துக் கொள்ளாமல் பலவிதமான  உணவை நாம் எடுத்துக் கொண்டால் நமக்குத் தேவையான எல்லா சத்துக்களும் நமக்குக்  கிடைத்து விடும்.

நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய நல்ல உணவுகள்: நமது உணவில் காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இயற்கை உணவாக இருந்தால் மேலும் சிறப்பு ஆகும். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம்.  தேன், இஞ்சி, கடுக்காய் பொடி, பூண்டு, சின்ன வெங்காயம், வாழைப் பழம், லெமன் ஜுஸ், பழச்சாறு,  இளநீர், தேங்காய், வேர்க்கடலை, மாதுளம்பழம், தயிர் போன்றவற்றை தினமும் எடுத்துக் கொள்ளலாம். 

தவிர்க்க வேண்டிய உணவுகள்:  துரித உணவை அறவே நீக்குங்கள். துரித உணவை அடிக்கடி உண்டால் நம் நமது உயிரும் துரிதமாக நம் உடலை விட்டுப் பிரியும் என்பது நிஜம். கார்பனெட்டெட் குளிர்பானங்கள் உடலுக்கு மிகவும் தீமை செய்யும் பானங்களாகும். பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் எண்ணையில்  பொரித்த உணவை தவிர்க்கவும். மாமிசம் தவிர்ப்பது நல்லது. மேலும் வெள்ளைச் சக்கரை(Refined sugar) , மேஜை உப்பு (Table salt) போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கல் உப்பு அளவுடன் சேர்க்கலாம்.

சாப்பிடும் முறை: சாப்பிடும் போது மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். கோபத்துடன் சாப்பிட உட்காதீர்கள். சாப்பிடும் போது தரையில் உட்கார்ந்து சப்பணமிட்டு சாப்பிடுவது உத்தமம். சாப்பிடும் போது தொலைக் காட்சி பார்க்கக் கூடாது. உணவை நன்றாக இரசித்து சாப்பிட வேண்டும். வாயை நன்றாக மூடி நன்றாக சவைத்து ருசித்து மெதுவாக சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும், சாப்பிடும் போதும், சாப்பிட்ட பின் அரை மணி நேரம் வரையிலும் தண்ணீர் அருந்தக் கூடாது. பசிக்கும் போது மட்டும் தான் உணவை உட்கொள்ள வேண்டும். தண்ணீர் தாகம் எடுக்கும் போது மட்டும் அருந்தினால் போதும். காலையில் எழுந்தவுடன் 1 அல்லது 2 லிட்டர் குடிக்க வேண்டும் என்பது எல்லாம் தேவையே இல்லை. 1 டம்ளர் குடிக்கலாம்.

இறுதி வார்த்தைகள்: உங்கள் உடலுக்கு எந்த சத்து தேவையோ அவற்றைக் கொஞ்சம் அதிகம் எடுத்துக் கொள்ளலாம் சத்துக்கள் உங்கள் உடலில் சீராகும் வரை.  உணவு மருந்தாகுமா? ஆம். சரியான  உணவை சரியான முறையில்  சாப்பிட்டால் நோய் உடலில் தோன்றவே தோன்றாது. உணவு மருந்தாகும் என்பது நிஜம் தான்.

பால் குடிப்பது நல்லதா?

யோகா பண்ணுவதால் என்ன பயன்?


Post a Comment

 
Top