April 22, 2025 07:22:57 PM Menu
 

நாம் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் சூடாக காபியோ அல்லது தேநீரோ தான் அருந்துகிறோம். ஒரு சிலர் காலையில் 2 லிட்டர் தண்ணீர் குடிக்கிறார்கள். 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமே இல்லை.  ஆனால் ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அதை விட சிறந்த முதல் உணவு என்ன தெரியுமா? வெதவெதப்பான தண்ணீரில் கலந்த எலுமிச்சம்பழச் சாறு தான் சிறந்த காலை முதல் உணவு ஆகும். காலையில் முதல் உணவாக எலுமிச்சம்பழச் சாறு ஏன் அருந்த வேண்டும்? மேலே படியுங்கள்....


காலையில் முதல் உணவாக எலுமிச்சம்பழச் சாறு அருந்துவதால் உடலுக்கு   பல நன்மைகள் ஏற்படுகின்றன. ஏன் ஆயுர்வேதத்திலும் இது சிறந்த காலை உணவாக சிபாரிசு செய்யப் படுகின்றது. அப்படி என்ன தான் எலுமிச்சம்பழச்சாற்றில் இருக்கிறது என்று பார்ப்போம்.

  • ஜீரணத்திற்கு பெரிதும் உதவுகிறது.
  • இரைப்பைக்  குடலை தூண்டி சுத்தப்படுத்துகிறது.
  • கல்லீரலைத் தூண்டி சுத்தப்படுத்துகிறது.
  • வைட்டமின் C யும், அஸ்கார்பிக் அமிலமும் அதிக அளவில் உள்ளது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துகிறது.
  • காய்ச்சல், மற்றும் ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் நம் ஊரில் இது காய்ச்சலையும்  ஜலதோஷத்தையும் அதிகபடுத்துவதாக நினைக்கின்றார்கள். அது தவறு.
  • இரத்தத்திலுள்ள நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது.
  • உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • உங்கள் தோல் பள பளக்க உதவுகிறது.
  • உங்கள் உடலில் pH அளவு சீராக இல்லையென்றால் பலவிதமான நோய்கள் வரும்.  pH சரியாக இருக்க எலுமிச்சம்பழச்சாறு உதவுகிறது.
  • இது ஒரு இயற்கையான  கிருமி நாசினி.
  • நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தி வாய்ந்தது.
  • புற்று நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உள்ளதாக சொல்லுகிறார்கள்.
  • உடலுக்கு உடனடியாக சக்தியைத் தருகிறது.
  • வாய் சுகாதாரத்திற்கும் நல்லது.
  • ஆஸ்துமா நோயாளிகளுக்கும் நல்லது.
ஆகவே தினமும் காலையில் முதல் உணவாக இளஞ்சூட்டில் உள்ள தண்ணீருடன்  எலுமிச்சம்பழச்சாற்றைக்  கலந்து  வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உங்களுக்கு மிகப் பெரிய நன்மைகள் உண்டாகும் என்பது உறுதி. 


வேறு விதமாகவும் எலுமிச்சம்பழச்சாற்றைப் பயன்படுத்தலாம்.  தினசரி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் ஜொலிக்கும். தோலில் உள்ள அழுக்குகள் நீங்கும். எலுமிச்சம்பழச் சாற்றை  தண்ணீரோடு கலந்து பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்வது நல்லது. முக்கியமாக பெண்களுக்கு நன்மை பயக்கும்.

வாழ்க வளமுடன்!











21 Jan 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top