நீங்கள் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? 
வாழ்க்கையில் நாம் எல்லா விஷயங்களுக்கும் ஒரே மாதிரி முக்கியத்துவம் கொடுக்க முடியாது. அதாவது, சில விஷயங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும். நீங்கள் சரியான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். நீங்கள் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?



பணம்: பணம் நம் வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை யாராலும்  மறுக்க இயலாது. பணத்திற்கு நாம்  நிச்சயம் முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும் என்பது நிஜம். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை ஆகி விடாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம்: நல்ல ஆரோக்கியம் நமக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் எவ்வளவு தான் பணம் வைத்து இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையென்றால் வாழ்வை எப்படி அனுபவிக்க முடியும்? ஆரோக்கியம் என்றால் எல்லோரும் உடல் ஆரோக்கியத்தை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றனர். மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானதே. எதையும் சரியாக சிந்திக்கும் மனம், எந்த பிரச்சினைகள் வந்தாலும் கலங்காத மனம், பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை சஞ்சலம் இல்லாமல் எடுக்கும் மனம் ஒரு மனிதனின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிக்கும் என்றால் அது மிகையாகது.

யோகாவும், தியானமும்: இன்று சிலர் பணம் சம்பாதிப்பதற்காக உடலைத் தேவைக்கதிகமாக வருத்திக் கொள்கின்றனர். உதாரணமாக இரவில் வேலை  செய்பவர்களை சொல்லலாம். அவர்கள் உடலை வருத்திப்   பணம் சம்பாதித்து அதை அனுபவிக்க நினைக்கும் போது நோயில் விழுந்து விடுகின்றனர். நல்ல உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவது எப்படி? யோகாவும் தியானமும் தினசரி செய்தால் உடலும் மனமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். நோயற்ற பெரு வாழ்வு வாழலாம்.

புகழ், சமூக அந்தஸ்து மற்றும் அன்பான குடும்பம்: வேறு என்ன வேண்டும் வாழ்வில்? புகழ் மற்றும் சமூக அந்தஸ்து கிடைக்க நாம் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் அவை  எல்லாவற்றையும் விட அன்பான குடும்பம் தான்  நம் எல்லோருக்கும் முக்கியமானதாக இருக்கிறது. பணம், ஆரோக்கியம்,புகழ் , சமூக அந்தஸ்து இருந்தாலும் நல்ல அன்பான குடும்பம் இல்லையென்றால் நம் வாழ்க்கை நரகம் தானே?

இறுதி வார்த்தைகள்: ஆக, நாம் வாழ்வில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண் டிய விஷயங்கள் முறையே, நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியம், அன்பான குடும்பம், பணம், சமூக அந்தஸ்து மற்றும் புகழ் ஆகியவைகளே  ஆகும்.

வாழ்க வளமுடன்!

நீங்கள் நல்லதையே நினைத்தால் நல்லது நடக்குமா?


மரண பயம் ஏன் 

Post a Comment

 
Top