செய்வினை உண்மையா என்பதைப் பற்றி பேசுவதற்கு முன் செய்வினை என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஒரு மந்திரவாதியின் துணைக் கொண்டு நமக்கு பிடிக்காத ஒருவருக்கு அவரது உடல் மற்றும் உடமைகளுக்குத் தீங்கு விளைவிப்பது தான் செய்வினை என்பதாகும். செய்வினை என்பது உண்மையா? மேலே படியுங்கள்........
வேதத்தில் மந்திர தந்திரம் போன்றவற்றைப் பற்றி விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சப்தத்திற்கும் ஒரு அதிர்வு உண்டு. அந்த அதிர்வு நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ (Positive or negative)  இருக்கும். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் 'ஓம்' என்னும் சொல் மிக சக்தி வாய்ந்த நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.

மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமாகவும் அவற்றைக் கேட்பதின் மூலமாகவும் நாம் நல்ல பலன்களை அடைய முடியும். அதே போல் தீமை விளைவிக்கும் மந்திரங்களும் இருப்பதாகவே தெரிகிறது. அவற்றை தாந்த்ரீகம் என்று சொல்லுகிறார்கள். செய்வினை செய்யும் மந்திரவாதிகள்  அவற்றைத் தான்  பயன்படுத்துவதாக நம்பப் படுகிறது.

வேத காலத்தில் சரியான மந்திரங்களை சரியாக உச்சரித்து நல்ல பலன்களைப்  பெற்றார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை என்றே சொல்ல வேண்டும். இன்று மந்திரம் சொல்லுபவர்கள் அலைபேசியையும் கையில் வைத்துக் கொண்டு அதில் பேசிக் கொண்டே மந்திரங்களை உச்சரிக்கிறார்கள். அவர்களுக்கு முறையான பயிற்சியும் இலை. ஆக, இன்று மந்திரங்களால் அதிக பலன் விளைவதில்லை என்பதே உண்மை.

அதே போல் தான் இன்று உண்மையான தாந்த்ரீக மந்திரங்கள் அறிந்தவர்களை  பார்ப்பதும் அரிது தான். இன்று நாம் பார்க்கும் மந்திரவாதிகள் எல்லாம் போலி மந்திரவாதிகளே. அவர்கள் நம் மக்களின் பலவீனத்தைப்  பயன்படுத்தி காசு பார்க்கிறார்கள். அவ்வளவு தான்.

இன்று உண்மையான செய்வினை செய்யத்  தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்பதே சந்தேகம் தான். அதனால் நாம் செய்வினைப் பற்றிக்  கவலைப் படவேண்டியதில்லை என்பதே நிஜம். இதற்கு மேலும் அப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு இருந்தால், அதாவது நீங்கள் யாரோ உங்களுக்கு சூனியம் வைத்திருப்பதாக நினைத்தால், ஆஞ்சநேயரை அனுதினமும் வழிபடுங்கள். அவருக்கு துளசி மாலை சாத்துங்கள்.நெய் தீபம் இடுங்கள்.எப்பேர்ப்பட்ட சூனியமும் உங்களை ஒண்ணும் செய்ய முடியாது.

வாழ்க வளமுடன்!

கடவுள் உண்மையில் இருக்கிறாரா? 

ஆன்மிகத் தேடல்கள் 

Post a Comment

 
Top