இது ஒரு பிரமிக்க வைக்கும் சாதனை  என்றே சொல்ல வேண்டும். ஆயிரம் சினிமாப்  படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் ஒரு மாமனிதர். அதாவது, சுமார் 5000 பாடல்களுக்கு மேல் இசை அமைத்து யாருமே  உடைக்கவே முடியாத  ஒரு அசுர உலக சாதனை  படைத்திருக்கிறார்  ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர். அவர் வேறு யாருமல்ல.  இன்று இசை உலகத்தின் முடி சூடா  மன்னராக விளங்கும்  நம் இசை ஞானி இளைய ராஜா தான் அவர்.




அவரது இசை சாதனைகளைப் பார்க்கும் போது  தெய்வ அனுக்கிரகம் அவருக்குப் பூரணமாக இருப்பதாகத் தோன்றுகிறது. என்ன ஒரு வாழ்க்கை?  என்ன ஒரு ஞானம்? உயர்ந்த ஜாதிக்காரர்களும் அவரது இசையில் மயங்கி அவரை வணங்குகிறார்கள் என்றால் அது மிகை யாகாது. என்றுமே நடவாத ஒரு அற்புதம் இது. யாருக்குமே கிடைக்காத பேரு இது. கர்நாடக இசையில் அவரைப் போல் புரட்சி செய்ய இன்னொருவரால் இனி முடியுமா என்பது சந்தேகமே.

அவர்  பின்னணி இசையின்  (Background music) பிதாமகன் ஆவார். அவரது பின்னணி இசையே  கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை சொல்லி விடும். அவர் லண்டனில் சென்று சிம்பனி கொடுத்து மேஸ்ட்ரோ ஆனவர். 'இசை ஞானி' என்ற பட்டம் அவருக்கு யார் வழங்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அந்த பட்டம் அவரால் பெருமை அடைந்தது என்பது நிஜம். அவரது உண்மையான பெயரிலும் ஞானம் உள்ளது. ஆம். அவரது இயற் பெயர் 'ஞான தேசிகன்' ஆகும்.

அவர் எத்தனைப்  பேரைத்  தன்  இசையால் மகிழ்ச்சிக்  கடலில் ஆழ்த்தியிருக்கிறார்? எத்தனைப் பேரின் துன்பத்தைப் போக்கியிருக்கிறார்? என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை அவரது வாழ்க்கை?  எனக்கு மட்டும் இப்படி ஒரு வாழ்க்கை கிடைப்பதாக இருந்தால் நான் 1000 பிறவிகள் புழுவாகப் பிறக்க மனதார சம்மதிப்பேன். எத்தனை பக்திப் பாடல்கள்? எத்தனை  ஆன்மிகப் பாடல்கள்? அவரது திருவாசகம் இசை கர்நாடக இசை ஜாம்பவான்களையே அவரை மதிக்க வைத்தது. அவர் பாடல்கள் பாடுவார். பாட்டுக்களை எழுதுவார். சகலகலாவல்லவன் கமலுக்கே அண்ணன் இவர்.

வாழ்க இசை ஞானி இளைய ராஜாவின் புகழ்!

உலகம்  உள்ளவரை அவர் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்!















தமிழகத்தின் தலை சிறந்த 7 நடிகர்கள் 

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் 

Post a Comment

 
Top