இந்த பிரபஞ்சம் அபரிதமான விசாலமானது. எத்தனை நட்சத்திரங்கள்? எத்தனைக் கோள்கள்? அதை விடுங்கள். இந்த உலகில் எத்தனை உயிரினங்கள்? நமக்கு எத்தனை  சொந்தக்காரர்கள்? எத்தனை உறவுகள் நமக்கு? எத்தனை நண்பர்கள்? நாம் யாருக்காக வாழ வேண்டும்? நமக்காகவா? நம் வாழ்க்கைத் துணைக்காகவா? நம் குழந்தைகளுக்காகவா? நம் உறவினர்களுக்காகவா? நண்பர்களுக்காகவா? அல்லது இந்த சமுதாயத்திற்காகவா? மேலே படியுங்கள்.....


நாம் தெரிந்தோ தெரியாமலோ இந்த உலகில் பிறந்து விட்டோம். நாம் முதலில் நமக்காக வாழ வேண்டும். குழந்தைகளாக இருக்கும் போது நம் பெற்றோர்களுக்காக வாழலாம். பெரியவர்களாக ஆனா பின், நாம் நம் நண்பர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும்  வாழலாம். திருமணம் ஆன பின் கணவன் அல்லது மனைவிக்காக வாழலாம். பின் குழந்தைகளுக்காக நாம் வாழ ஆரம்பித்து விடுகிறோம்.

நாம் பிறருக்காகவும் கொஞ்சம் வாழப் பழக வேண்டும். நம் குடும்ப தேவைகள் பூர்த்தி ஆன பின் நாம் பிறருக்கு கொஞ்சம் நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம். பண உதவி செய்ய முடியாதவர்கள் மற்ற உதவிகளை செய்யலாம் அல்லவா?

நாம் நமக்குப் பின்னால் வாழப் போகிறவர்களுக்காகவும் வாழ வேண்டும். எப்படி என்கிறீர்களா? இந்த பூமியின் சுற்றுப்புறசூழலைக் கெடுக்காமல், மாசுப் படுத்தாமல்  பின் வரும் சந்ததியருக்கு விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

நாம் நம்மை அறியும் போது (self realization) இந்த உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிடத்தும் அன்பு பிறக்கிறது. நாம் நமக்காக மட்டுமில்லாமல் பிறருக்காகவும் வாழ ஆரம்பிப்போம். 

நாம் யாருக்காக வாழ வேண்டும்? நாம் நமக்காகவும், நம்மை சுற்றியுள்ளவர்களுக்காகவும் மற்றும் எல்லா உயிரினங்களுக்காகவும் வாழ வேண்டும். 

வாழ்க வளமுடன்!

கடவுள் உண்மையில் இருக்கிறாரா?

நம் மரண பயம் 

Post a Comment

 
Top