இந்திய ஜோதிட இயல் ஒரு அற்புத பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். வேத காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் கிரகங்களைப் பற்றியும் அவை மனித வாழ்வை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பது பற்றியும் துல்லியமாக தெரிந்து வைத்திருந்தனர். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு விதமாக மனித வாழ்வைப் பாதிக்கிறது என்பது நிஜம்.



சூரியன்: உடல் ஆரோக்கியம், தந்தை, சுய சிந்தனை, தலைமைஏற்கும் தகுதி, பிடிவாதம், ஈகோ, அரசாங்க உத்தியோகம் போன்றவற்றைக் குறிக்கிறது.

சந்திரன்: மனம், அம்மா, அயல் நாட்டு வியாபாரம், வெளி நாட்டு யோகம், பால் மற்றும் திரவப் பொருட்கள் இவற்றைக் குறிக்கிறது.

செவ்வாய் வீடு, மனை, சகோதர்கள். சகோதரிகள், போலீஸ் துறை, ராணுவம், விளையாட்டுத் துறை வீரம், நெருப்பு இவற்றைக் குறிக்கிறது.

புதன்: நுண்ணறிவு, யோசிக்கும் திறமை, கலையில் திறமை, நகைச்சுவையாக பேசும் திறன், ஜோதிட அறிவு, வியாபாரம், தாய் மாமன், நரம்பு, படிப்பு, கணக்காளர், புத்தக பதிப்பாளர்  போன்றவற்றைக் குறிக்கிறது.

குரு ஆன்மிகம், கல்வி, ஆசிரியர் தொழில், செல்வம், குழந்தைப் போன்றவற்றை கொடுக்கிறது.

சுக்கிரன் பணம், வாகனம், வாசனைத் திரவியங்கள், விலை உயர்ந்த  ஆடைகள், காதல்,பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள், காமம்  இவற்றைக் கொடுக்கிறது.

சனி: ஆயுள், தடங்கல், உடலில் குறை, விபத்து, சிறை வாசம், அடிமைத் தொழில், இயந்திரம், எண்ணை, போராட்டமான வாழ்க்கை இவற்றைக் குறிக்கிறது.

ராகு:  இது சனியைப் போல் பலன் கொடுக்கும். அப்பாவின் அப்பாவையும் குறிக்கும்.

கேது: இது செவ்வாயைப் போல் பலன் கொடுக்கும். அம்மாவின் அப்பாவைக் குறிக்கும்.

உங்களுக்கு நிலம், வீடு  வாங்க வேண்டும் என்றால் செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் பலம் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் செவ்வாய்க்குரிய தெய்வமான முருகனை வழிப் பட வேண்டும்.

புதனுக்குப்  பெருமாளை வணங்க வேண்டும்.

சூரியனுக்கு சூரிய நமஸ்காரம் விசேஷம். சூரிய நாராயணனையும் வணங்கலாம். காயத்ரி ஜெபம் மிகவும் நல்லது.

சந்திரனுக்கு அம்மன் வழிபாடு விசேஷம்.

குருவுக்கு தட்சிணாமூர்த்தியை வழி பாடவும். பிரம்மாவையும் வழிபடலாம்.

சுக்கிரனுக்கு உகந்த தெய்வம் லக்ஷ்மி தான்.

சனி கெட்டிருந்தால், விநாயகர் மற்றும் ஆஞ்சநேய வழிபாடு சிறந்த பலனைத் தரும்.

ராகுவுக்குத் துர்க்கையை தொழுங்கள்.

கேதுவுக்கு விநாயக வழிபாடு மட்டும் தான் பலன் கொடுக்கும் என்பது விதி.

வாழ்க வளமுடன்!

முக்கியமான வாஸ்து விதிகள் 

உங்கள் விதி எண்ணைக் கண்டு பிடிப்பது எப்படி?










Post a Comment

 
Top