இலட்சியங்களே இல்லாமல் எத்தனையோ கோடி மக்கள் நம் நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களை விட்டு விடுவோம். சிலர் வாழ்க்கையில் சில இலட்சியங்களை மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களால் அந்த இலட்சியங்களை அடைய முடிவதில்லை. ஏன் அவர்களால் கடினமாக உழைத்தும் வெற்றி பெற முடியவில்லை? மேலே படியுங்கள்.....


முதலில் உங்களுக்கு அந்த  இலட்சியங்களை அடையவேண்டும் என்கின்ற வெறி நெருப்பாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். நமக்கு மனம் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆழ் மனம் என்று ஒன்று இருக்கிறது. ஆழ் மனம் மிகவும் முக்கியமானது. நமது சாதாரண மனதிற்கும் ஆழ்மனதிற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி நாம் அறிந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றிப் பெறலாம்.

நமது சாதாரண மனது எதிலேயும் காரணம், நிருபணம் கேட்கும். தர்க்கம் புரியும். நீங்கள் எழுத்தாளராக ஆக நினைத்தால் உங்கள் மனம் இப்பொழுது எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கும் போது நம்மால் எப்படி ஜெயிக்க முடியும் என்று தர்க்கம் பண்ணும். அது கஷ்டம், இதில் இந்த பிரச்சினை வரலாம்  அப்படி ஆகி விடலாம் இப்படி ஆகி விடலாம் என்று தர்க்கம் பண்ணிக் கொண்டே இருப்பதால் நம்மை அறியாமலே நம் திறன் குறையும். நம் நம்பிக்கையும் குறையும். அதனால் நாம் ஏதோ முயற்சி செய்துக் கொண்டிருப்போம் உண்மையான நம்பிக்கை இல்லாமலே. பின் எப்படி ஜெயிக்க முடியும்?

நம் ஆழ் மனதிற்கு காரணம் தேவையில்லை. அது தர்க்கம் பண்ணாது. நாம் எதை கற்பனை செய்கிறோமோ அதை அப்படியே நம்பி விடும். இதனால் நன்மையையும் உண்டு. தீங்கும் உண்டு. நீங்கள் பணக்காரராக ஆக விரும்பினால், உங்களிடம் நிறைய பணம் இருப்பதாக கற்பனை செய்யுங்கள். பெரிய வீட்டில் வசிப்பதாக கற்பனை செய்யுங்கள். படகு காரில் பவனி வருவதாக நினைத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் ஆழ்மனமானது உங்கள் மனதில் ஏற்பட்ட படத்தையும் உங்கள் உணர்ச்சிகளையும் அப்படியே நம்பி விடும். அப்பொழுது நீங்கள் உண்மையாக நம்பிக்கையுடன் கடினமாக உழைப்பீர்கள். வெற்றிக் கனியை பறிப்பீர்கள்.

நீங்கள் எதுவாக ஆக விரும்புகிறீர்களோ அதுவாக காட்சிப் படுத்திப் (Visualize) பாருங்கள். வெற்றி நிச்சயம். நீங்கள் நினைத்ததை அடைவீர்கள்.

வாழ்க வளமுடன்!  








Post a Comment

 
Top